Wednesday, September 26, 2012

ஒரு நாள் மட்டுமாவது...



அன்புடன் ஒரு நிமிடம் 17.

ஒரு நாள் மட்டுமாவது...

ழை நேரம். மணி மகா பிசியான காலை எட்டரை. பையன் பரசு ஸ்கூலுக்கு போகணும். அப்பா வாசு ஆபீஸ் போகணும். அம்மா பரபரத்தாள் .

கார் ரிப்பேர். ஸ்டார்ட் ஆகலே! என்று தெரிவித்தார் வாசு. தினம் அவர்தான் அவனை ஸ்கூலில் விட்டுவிட்டு ஆபீஸ் போவார்.

ஐயையோ இப்ப எப்படி ஸ்கூல் போறது?’ அம்மாவிடமிருந்தும் மகனிடமிருந்தும் ஏக காலத்தில் குரல் வந்தது.

உதட்டைப் பிதுக்கினார்.

நல்ல ட்ரை பண்ணிப் பாருங்கப்பா. அல்ரெடி லேட்.

தெரிஞ்ச வித்தை எல்லாம் பண்ணிப் பார்த்துட்டேன். ஒண்ணும் பலிக்கலை.

அப்பா! கிட்டத்தட்ட அலறினான்.

எனக்கும் லேட் ஆகுது. Time I made my way to office! இப்ப என்ன பண்றது?”

நீங்க அவனை ஒரு ஆட்டோ பிடிச்சு ஸ்கூல்ல விட்டிட்டு...

இந்த மழையில இங்கே ஒரு ஆட்டோ காலியா வராது. நோ யூஸ்!

கால் டாக்சி?”

சொன்னா வர முக்கால் மணி நேரம் ஆகுமே?”

இப்ப என்ன...

ஒண்ணு செய்யலாம்.பரசு, குடையை எடுத்துக்க. பஸ்ல போயிடு.

பஸ்ஸா?”

நிறைய உன் பிரண்ட்ஸ் பஸ்லதானே போறாங்க? இன்னிக்கு ஒரு நாள் அவங்களோட ஜாய்ன் பண்ணிக்க!

அவன் பதிலுக்குக் காத்திராமல் புறப்பட்டார்.

ஆமாடா அட்ஜஸ்ட் பண்ணிக்க, வேறே வழியில்லை. என்றாள அம்மாவும் வேறே வழியின்றி, “ஷூவை கழற்றி செருப்பைப் போட்டுக்க. போட்டான்...

பாவம்! மழையில பஸ்ஸில...எப்படி போய் சேருவானோ?” தெருவையே பார்த்துக்கொண்டு அம்மா...

மாலையில் லேசாய் நனைந்து கொண்டு வந்த மகன் டியூஷனுக்கு சென்றான். ஏழு மணிக்கு வந்து டூல்ஸை எடுத்துக்கொண்டு காரருகில் சென்ற வாசுவிடம், “அதான் ஒழுங்கா ஸ்டார்ட் ஆகுதே, காலையில ஏன் அந்த பாவ்லா எல்லாம்?”

அதிர்ச்சியை மறைக்க ஒரு சிரிப்பை செலவிட்டார் வாசு.

மத்தியானம் என் தம்பி வந்திருந்தான். காரை பத்தி சொன்னேன். பார்த்துட்டு, தொட்டதுமே ஸ்டார்ட் ஆகுதே, என்ன பிரசினைன்னு கேட்டிட்டு போறான்.

சொன்னார், “வேணுமின்னுதான் அப்படி செஞ்சேன்.

வேணுமின்னுன்னா?”

நம்ம பையன் நாழைக்கு பிழைக்க வேணுமின்னுதான்! என்றார்,

நாமல்லாம் கஷ்டத்தோடு வளர்ந்தோம். பிரசினைகள் வந்தா சமாளிக்கறதுக்கு நல்லாவே பழகியிருக்கோம். நம்ம பசங்களுக்கு அந்த சக்தி கொஞ்சமாவது இருக்க வேண்டாமா? நாளைக்கு எத்தனையோ பிரசினைகள் வரலாம் இல்லையா? அதற்கான அனுபவங்களையும் கொடுக்க வேண்டியது நம்ம கடமை. அதான் அப்படி நடிச்சு அவனை மழையில பஸ்ஸில போக வெச்சேன். கொஞ்சம் கஷ்டப்பட்டிருப்பான் தான். ஆனால் தன்னால் முடியுதுங்கறதையும் தெரிஞ்சு கொண்டிருப்பான்!

அவருடைய எளிய விளக்கத்தில் அவள் முகத்தில் முகம் மலர்ந்தது.   

('அமுதம்' ஆகஸ்ட் 2012 இதழில் எழுதியது)
<<<>>>   

11 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

//சொன்னார், “வேணுமின்னுதான் அப்படி செஞ்சேன்.”

“வேணுமின்னுன்னா?”

“நம்ம பையன் நாழைக்கு பிழைக்க வேணுமின்னுதான்!” என்றார்,//

அருமை! ;) பாராட்டுக்கள்.

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை... இது போல் நிறைய பழக்க வேண்டி இருக்கிறது இந்தக்கால குழந்தைகளுக்கு...

நன்றி...

வெங்கட் நாகராஜ் said...

சரியாத் தான் செய்து இருக்கார்.... நல்ல பகிர்வுக்கு நன்றி.

ரிஷபன் said...

ஆனால் தன்னால் முடியுதுங்கறதையும் தெரிஞ்சு கொண்டிருப்பான்!

உங்களால் தான் இப்படி நச்னு ஒரு முடிவு தர முடியும்

Rekha raghavan said...

பிரச்சனைகளை சமாளிக்க அப்பா கொடுத்த ட்ரீட்மெண்ட் சூப்பர்! நல்ல டெக்னிக்.

ரேகா ராகவன்.

தி.தமிழ் இளங்கோ said...

என்னதான் இருந்தாலும் திடீரென்று, அதுவும் மழை பெய்யும்போது இதுமாதிரி செய்திருக்கக் கூடாது. ஆரம்பத்தில் இருந்தே நாமும் கூட இருந்து பழக்கப்படுத்தி இருக்க வேண்டும்.

ADHI VENKAT said...

நல்ல தீர்வு தான். எப்படியிருந்தாலும் அட்ஜஸ்ட் செய்து இருக்க பழக வேண்டும்.

Unknown said...



அருமை கே.பி ! ஆனாலும் மழையில் நனைய விட்டது...! சுரம் வந்தால் நாம்தானே படவேண்டும்

மனோ சாமிநாதன் said...

எளிமையான, சிந்திக்க வைக்கும் கதை! எல்லா பெற்றோரும் இப்படியிருந்தால் பல பிரச்சினைகள் தானாகவே சரியாகி இடும்!!

திண்டுக்கல் தனபாலன் said...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/10/blog-post_9.html) சென்று பார்க்கவும்...

நன்றி…

இராஜராஜேஸ்வரி said...

எளிய விளக்கம்.. அரிய கருத்து ....

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!