M. N. நம்பியார்! நம்பி யார் வந்தாலும் நன்றாகத் தன் பாத்திரத்தை நடித்துக் கொடுப்பவர்.
Tuesday, March 7, 2023
நம்பி யார் வந்தாலும்...
M. N. நம்பியார்! நம்பி யார் வந்தாலும் நன்றாகத் தன் பாத்திரத்தை நடித்துக் கொடுப்பவர்.
Friday, February 3, 2023
ரசிகர் நாடி பார்த்து...
ஷம்மி கபூரை “Tumsa Nahin Dekha…”ன்னு ஆட வைத்தார்..
தேவ் ஆனந்தை “Jab Pyar Kisise Hota Hai..”ன்னு தேட வைத்தார்.
ஜாய் முகர்ஜியை “Phir Wohi Dil Laya Hun..”ன்னு பாடவைத்தார்.
இப்படியாகத்தானே 1960-களில் ஓர் அழகிய 'மியூசிகல் ரொமான்ஸ்' ஃபார்முலாவை ஃபார்ம் செய்தார்.
ட்ரெண்ட் மாறியதும் ‘Yadon Ki Bharat..’ என்று மசாலா ஃபார்முலா கொடுத்தார். கொடி கட்டிப் பறந்தது.
அலுத்துப்போன ரசிகர் நாடி பார்த்து 80-களில் 'Qayamat Se Qayamat Tak' தந்தார். புதுசு! இன்னொரு தினுசு!
பிரபல டைரக்டர், கதாசிரியர் Nasir Hussain... இன்று பிறந்தநாள்!
R.D. Burman ஸ்டார் மியூசிக் டைரக்டர் ஆனது இவர் எழுதி தயாரித்த ‘Teesri Manzil’ படத்தில்தான். அப்புறம் நெடுங்காலத்துக்கு R.D. தான் இவர் படங்களுக்கு ஆஸ்தான இசையமைப்பாளார்.
அன்றைக்குப் பூத்த ரோஜா முகத்துடன் “----” என்று படு உற்சாகமாகப் பாடிக்கொண்டே அறிமுகமானார் இவரது ‘Dil Deke Dekho’ படத்தில்! அதிலிருந்து இவரது பல படங்களுக்கு ஆஸ்தான கதாநாயகி ஆஷா பரேக் தான்!
மருமகன் ஆமிர்கானை ஹீரோவாகவும் மகனை டைரக்டராகவும் அறிமுகப்படுத்தியது 'Qayamat..’ படத்தில்.
சுவையாக கதை சொல்வதில் 'Hum Kisise Kum Nahin’ (யாருக்கும் நாம் இளைத்தவரல்ல) என்று காட்டியவர். அந்தப் படமும்!
—
Thursday, February 2, 2023
20 வருட ஆராய்ச்சி ..
2 -இன் மூன்றாவது வர்க்கம் 8. இதையே 2 என்பது 8 -இன் மூன்றாவது வர்க்கமூலம் எனலாம். சரி, இதையே 3 -இன் பார்வையில் சொல்வதானால்? '3 என்பது 2 -ஐ எத்தனை முறை வர்க்கப் படுத்தினால் 8 வரும் என்பது' என்பதை யோசித்தார் அவர். லாகர்தம் உருவானது. அவர்?


