M. N. நம்பியார்! நம்பி யார் வந்தாலும் நன்றாகத் தன் பாத்திரத்தை நடித்துக் கொடுப்பவர்.
நம் பிரான் (Pran)! அதாவது யார் ஹீரோ என்றாலும் வில்லன் இவரே, ரொம்பப் படங்களுக்கு!
ஊட்டியில் படித்துக் கொண்டிருந்தவர் கலைத்தாய் நடிப்பாசையை ஊட்டிவிட நாடகக் குழுவில் சேர்ந்தார்.
அதிக வேடம் ஒரே படத்தில்? அசைக்க முடியாத ரிகார்ட் வைத்திருக்கிறார். 'திகம்பர சாமியாரி'ல் பதினோரு வேடம்!
மிகவும் ஸ்டைலாக வந்தது, 'சிவந்த மண்'ணில். என்னவொரு காஸ்ட்யூம்!
மிகவும் சர்ப்ரைஸ் தந்ததை நம் 'நெஞ்சம் மறப்பதில்லை'. தள்ளாத வயதிலும் பழி மாறாமல் வெகுண்டெழுந்ததும் திடுக்கிடாதவர் யார்? அங்குலம் அங்குலமாக சேற்றில் அமிழ்ந்துவிடும்போது கைகள் துடிக்கும்!
வில்லனாகவே வருகிறாரே என்று வெம்பிய வேளையில் நம்பியார் ரொம்பவே நல்லவனாக (கிட்டத்தட்ட ஹீரோ!) வந்து அசத்தினார் 'சுபதினம்' படத்தில்! Carried the entire film on his shoulders!
அந்த ஷ உச்சரிப்பு இவருக்கு ஷரியான முத்திரை! Sean Connery யைப் போல!
இவருக்குள் ஒரு காமெடியன் உண்டு. அவ்வப்போது அவரை பார்க்கலாம். ‘மிஸ்ஸியம்மா’வில்… ‘அஞ்சல் பெட்டி 520’ இல் …
வேடம்தான் அசைவம். அவரோ சைவம். ஸ்டூடியோவோ வெளிப்புறப் படப்பிடிப்போ, உணவு மனைவி கையால் சமைத்ததுவே.
Marc 7 பிறந்தநாள்!
1 comment:
சிறப்பான மனிதர் குறித்த தகவல்கள் ..... முகநூலில் படித்து ரசித்தேன்.
Post a Comment
உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!