327 கி.மீ உயரத்தில் 27400 கி மீ வேகத்தில் அவர் பறந்த 108 நிமிடம் சிறந்த இடம் பெற்றுவிட்டது வரலாற்றில். ஏனெனில் விண்கலம் ஒன்றில் பூமி வலம் வந்த முதல் மனிதர் அவர்.
Yuri Gagarin... இன்று பிறந்தநாள்!
புறப்படுமுன் அவர் சொன்ன ‘Let’s Go!’, எதைத் தொடங்கு முன்னும் சொல்லும் சொல்லாக பிரபலமாகிவிட்டது.
பூமிக்குத் திரும்பியபோது... குறித்த இடத்துக்கு சற்றே அப்பால் (250 கி மீ) விண்ணுடையும் பாராசூட்டுமாக இவர் தரை இறங்கியதும் பார்த்துப் பதைத்து நின்ற ஒரு அம்மாவையும் பெண்ணையும் பார்த்து, "பயப்படாதீங்க, நான் உங்கள் நாட்டவன்தான்."
கண்டங்களின் கரைகளைக் கண்டவர் சொன்னது: "வளிமண்டலத்திலிருந்து ஒளிக் கதிர்கள் சிதற, அடிவானம் ஆரஞ்ச் வண்னத்தில் மின்ன, அது வானவில்லின் ஒவ்வொரு வண்ணமாக மாற, என்னவொரு வர்ணனைக்கடங்காத வண்ண அடுக்கு!"
'அத்தனை அழகு உலகு! அழித்து விடாதீர்கள்!' என்றொரு வேண்டுகோளும் வைத்தார், நம் கோளின் அழகைக் கண்டதும்.
ஆறு வருடத்துக்குப் பின் ஒரு மிக்5 விமானத்தை சோதனையோட்டம் பார்த்தபோது விபத்தில் பலியானார்...
<><><>
1 comment:
சிறப்பான தகவல்கள். உங்களால் பல விஷயங்கள் அறிந்து கொள்கிறோம். நன்றி.
Post a Comment
உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!