Thursday, February 2, 2023

20 வருட ஆராய்ச்சி ..


2 -இன் மூன்றாவது வர்க்கம் 8. இதையே 2 என்பது 8 -இன் மூன்றாவது வர்க்கமூலம் எனலாம். சரி, இதையே 3 -இன் பார்வையில் சொல்வதானால்? '3 என்பது 2 -ஐ எத்தனை முறை வர்க்கப் படுத்தினால் 8 வரும் என்பது' என்பதை யோசித்தார் அவர். லாகர்தம் உருவானது. அவர்?

John Napier... (1555 - 1617) Feb.1. பிறந்த நாள்!
90 பக்க லாகர்த அட்டவணையுடன் தன் நூலை வெளியிட்டபோது 20 வருட ஆராய்ச்சி முடித்திருந்தார். Logos(விகிதம்) Arithmos (எண்) என்ற கிரேக்க வார்த்தைகளைக் கொண்டு லாகர்தம் என்றார் அதை.
திரிகோணமிதியில் அது விரிவாக உபயோகமானதில் தொடங்கி ஆச்சரியப்படுத்துகிற பல அப்ளிகேஷன்கள். கப்பல்கள் இன்னும் கம்பீரமாக செலுத்தப்பட்டன. கிரகங்களின் சஞ்சாரம் கிரகிக்கப்பட்ட்டது எளிதாக. சைக்காலஜியில் கூட. ஆம், பல சமயங்களில் நம் பார்வைக்கும் தேர்வுக்குமிடையே ஒரு லாகர்த அமைப்பு இருக்கிறது. எல்லாம் தாண்டி இசையிலும் லாகர்தத்தின் பங்கு இருக்கிறது, குறிப்பாக இன்டர்வல்களை அளவிடுவதில்.
'Napier's Bones'. என்பார்கள் அதை. எலும்பு மாதிரி இருக்கும் இரண்டு கழிகளை வைத்துக் கொண்டு பெருக்கல்களை 'சிறு'க்கல்களாக்கினார். அது பின்னால் ஸ்லைட் ரூல் ஆகியது.
திருடும் தன் வேலைக்காரனைக் கண்டு பிடித்துத் திடுக்கிட வைத்த நிகழ்வு சுவாரசியம்! இருட்டான அறைக்குள் வேலைக்காரர்களை ஒவ்வொருவராக போகச் சொன்னார். 'உள்ளேயிருக்கும் சேவலை தொடணும். திருடன் தொட்டால் மட்டும் அது கத்தும்,' என்றார். கத்தாமலேயே கெத்தாகப் பிடித்து விட்டார் திருடனை. மை பூசி வைத்திருந்த சேவலை அவன் மட்டும்தானே தொடவில்லை?

No comments:

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!