“ஏரிக்கரை மேலிருந்து எட்டு திசை பார்த்தி"ருக்கும் யேசுதாஸ் குரலுக்கு “மாமரத்தின் கீழிருந்து முன்னும் பின்னும் பார்த்திருந்து..” என்று எசப்பாட்டு கொடுக்க இவர் குரல் தான் பொருத்தம். வீணைத் தந்தியின் மென்மையுடன் போட்டியிடும் அளவுக்கு ஒடுங்கியெழும் குரலில் ‘நான் மாமரத்தின் கீழிருந்து..’வை அவர் பாடும் நேர்த்தி! அந்த “உன்னாலே தூக்கம் போயாச்சு, உள்ளார ஏதேதோ ஆயாச்சு!” போயாச்சு -வை அவர் இழுக்கிற இழுப்பில் நம் கவலையெல்லாம் போயாச்சு! “மாமன் நினைப்பில் சின்னத் தா...யிதான்,” என்று இழுத்துப் பாடிவிட்டு “மாசக் கணக்கில் கொண்ட நோ...யிதான்” பாடும்போது நானோ மீட்டர் குறையாது.
Saturday, April 29, 2023
"அத்தனையும் பொய்யாச்சு ராசா.."
“ஏரிக்கரை மேலிருந்து எட்டு திசை பார்த்தி"ருக்கும் யேசுதாஸ் குரலுக்கு “மாமரத்தின் கீழிருந்து முன்னும் பின்னும் பார்த்திருந்து..” என்று எசப்பாட்டு கொடுக்க இவர் குரல் தான் பொருத்தம். வீணைத் தந்தியின் மென்மையுடன் போட்டியிடும் அளவுக்கு ஒடுங்கியெழும் குரலில் ‘நான் மாமரத்தின் கீழிருந்து..’வை அவர் பாடும் நேர்த்தி! அந்த “உன்னாலே தூக்கம் போயாச்சு, உள்ளார ஏதேதோ ஆயாச்சு!” போயாச்சு -வை அவர் இழுக்கிற இழுப்பில் நம் கவலையெல்லாம் போயாச்சு! “மாமன் நினைப்பில் சின்னத் தா...யிதான்,” என்று இழுத்துப் பாடிவிட்டு “மாசக் கணக்கில் கொண்ட நோ...யிதான்” பாடும்போது நானோ மீட்டர் குறையாது.
மூன்று முறை சிறந்த நடிகர் ஆஸ்கார்...
ஆஸ்கார் சரித்திரத்திலேயே மூன்று முறை சிறந்த நடிகர் ஆஸ்கார் வாங்கிய ஒரே ஒருவர் தான் உண்டு. மார்லன் பிராண்டோ? இல்லை. ஸ்பென்சர் டிரேஸி? டஸ்டின் ஹாஃப்மேன்? ரிச்சர்ட் பர்ட்டன்? பீட்டர் ஓ டூல்? பால் நியூமேன்? இவங்க யாரும் இல்லை.
Friday, April 28, 2023
புலிட்சர் பரிசு நாவல்...
Gregory Peck நடித்த, 3 ஆஸ்கார் வாங்கிய அற்புதப் படம், ‘To Kill A Mocking Bird’ நினவிருக்கிறதா? அந்தப் புலிட்சர் பரிசு நாவலை எழுதியவர்...
ஐந்து வயது ஆர்வம்..
‘Camp Nowhere’ 1994 இல் வந்த படம். ரெண்டு வாரத்துக்குத்தான் ஏதோ ஒரு சின்ன வேடத்தில் நடிக்க அந்தப் பெண்ணைக் கூப்பிட்டு இருந்தாங்க. முக்கியமான நடிகை ஒருவர் திடீரென்று ஒதுங்கிக் கொண்டார். என்ன செய்வது? யோசித்த டைரக்டர் இவரை அந்த ரோலுக்கு ப்ரமோட் செய்தார். அசத்திவிட்டார் அந்தப் பாத்திரத்தில். சின்ன, பெரிய திரை இரண்டிலும் ஸ்டார் ஆகிவிட்டார்.
Wednesday, April 26, 2023
பன்முக வித்தகர்....
‘எப்படி நாம் கடந்த காலத்தின் சந்ததியோ அதேபோல் வருங்காலத்தின் பெற்றோரும் நாம்தாம் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.’
என் கனவுகள்...
‘என் கனவுகள் எனக்கு மட்டுமே சொந்தமானவை. அவற்றிற்காக நான் வேறு யாருக்கும் பதில் சொல்ல வேண்டியதில்லை. துன்புறும்போது அவை எனக்குப் புகலிடம். தளையற்று இருக்கும்போது அவை என் ஆகப் பெரிய சந்தோஷம்.’
முதல் தந்தி...
Saturday, April 22, 2023
வாழ்வின் சோகம்... இலக்கிய வேகம்....
எந்த ஒரு மீட்டிங்கிலும் சரி, கூட்டத்தை நோக்கி, உங்களில் பள்ளிநாட்களில் ‘Jane Eyre’ படிக்காதவர்கள் விரல் உயர்த்துங்கள் என்று சொன்னால் விரல் உயர்த்தியவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அத்தனை புகழ் பெற்ற அந்த (துணைப்பாடக்) கதையை எழுதியவர்...
Thursday, April 20, 2023
அனேகமாக புத்திசாலி...
உங்களை ஒண்ணு கேட்கிறேன்…
பொன் மனம்...
மனநிலை பாதிக்கப்பட்டவர்களை கைகளைப் பூட்டி அறைகளில் அடைத்து வதைகளுடன் கூடிய வைத்தியம் பார்த்தது அவரை வதைத்தது. கதவுகளைத் திறந்து விட்டார். கலந்துபேசி ,அருகாமையில் ஒரு தோழமை கொடுத்து... என்று மனோ தத்துவத்தில் புதிய அத்தியாயங்களை எழுதினார்.
Monday, April 3, 2023
ஜோவாக, ஜோராக...
“Que Sera, Sera... Whatever will be, will be..”
Saturday, April 1, 2023
விதை? இவர் போட்டது!
இன்றைக்கு துப்பறியும் நாவலின் அபார வடிவம் அறிவீர்கள். ஆனா விதை? இவர் போட்டது! இவர் அமைத்த ட்ராக்கில் இன்றுவரை க்ரைம் நாவல் ரயில் ஓடுகிறது.
Edgar Wallace! இன்று பிறந்த நாள்.
அவரது உச்சப் புகழ் காலத்தில் இங்கிலாந்தில் வாசிக்கப்பட்ட நாலு புத்தகத்தில் ஒன்று அவருடையது. மட்டுமா? மிக அதிகமாக (160) படமாக்கப்பட்ட நாவலாசிரியர்களில் ஒருத்தர். எழுதிய 170 நாவலுமே பெஸ்ட் ஸெல்லர். எழுதிக் குவித்தார். ரெண்டு செக்ரட்டரிக்கும் மூணு டிக்டேஷன் மெஷினுக்கும் ஒரே சமயத்தில் நாவல், நாடகம், கதை என்று நாளை நடத்திக் கொண்டிருப்பார். ‘One man writing machine’ அப்படீம்பாங்க. 72 மணி நேரத்தில் ஒரு நாவல் எழுதி விடுவார்.
1890 -களில் ஆப்பிரிக்காவிலிருந்து கட்டுரைகளை பிரிட்டனுக்கு அனுப்பிக் கொண்டிருந்தபோது தவறுதலா வேறொரு பத்திரிகைக்கு சென்றுவிட்டது ஒரு கட்டுரை. அவங்களுக்கு பிடிச்சுப் போச்சு. அவங்க வாங்கி பிரசுரிக்க ஆரம்பிக்க, அந்த The Daily Mail இல் எடிட்டரானபோது சம்பளம் அப்போதே 4000 டாலர்!
கிரைம் ரிப்போர்ட்டராக வேலை பார்த்ததாலோ என்னவோ, உண்மைகளோடு ஒட்டி உறவாடியதால், தன் கதைகளில் பிளாட், ஃபார்முலா என்றில்லாமல் பல கோணங்கள், பல பாத்திரங்கள், பல மனப்பாங்குகள் என்று பிரமாதப் படுத்தியிருப்பார்.
சட்டத்தினால் தண்டிக்க முடியாத குற்றவாளிகளைக் கண்டறிந்து தாங்களே தண்டனை வழங்குவதற்கு ரகசிய சங்கம் அமைத்த நாலு புள்ளிகளின் கதை தான் இவர் எழுதிய முதல் மிஸ்டரி நாவல் ‘The Four Just Men.’ கையோடு அதை தானே பப்ளிஷ் செய்ய விரும்பியவர் கையை சுட்டுக் கொண்டார். விளம்பரத்துக்காக கொலைகாரனை கண்டுபிடிங்கள் போட்டி (அட்டையில்: 'சுவையான ஒரு கதையைப் படிப்பதோடு முடிவில் யார் கொலை செய்தது என்பதைக் கண்டு பிடித்து படிவத்தை நிரப்பி அனுப்புபவர்களுக்கு பரிசு 500 பவுண்ட்!') நடத்தியதில் பின்னும் நஷ்டம், ஒருவருக்குத்தான் பரிசு என்று அறிவிக்கத் தவறியதால்.
துணை நடிகை அம்மாவால் பாராமரிக்க முடியவில்லை.. ஆதரித்த தம்பதி தத்தெடுக்க அங்கே அக்கா க்ளாராவின் ஊக்குவிப்பில் வளர்ந்தவர். வேலைக்காக அலைந்தபோது… கப்பலில் சமையல் வேலை தெரியும் என்று ஏறியவர் தவறை உணர்ந்து அடுத்த கரையில் இறங்கி லண்டனுக்கு வழி நடந்த நாட்கள் முப்பது.
ஷெர்லக் ஹோம்ஸ் துப்பறியும் கானன் டாயிலின் ‘The Hound of the Baskerville’ நாவலுக்கு திரைக்கதை எழுதி இருக்கிறார். மற்றொரு முக்கியப் படம் ‘King Kong’ தவிர நிறைய படங்களுக்கு ‘ஸ்கிரிப்ட் டாக்டரா’க இருந்திருக்கிறார்.
டி.வி.யில் ஓடிய Edgar Wallace Mystery Series இல் வந்த படங்கள் 48. இன்னொரு பக்கம் Edgar Wallace Mystery Magazine என்று ஒன்று மூன்று வருடங்கள் வெளிவந்தது.
ஒரு நண்பர் இந்த எழுத்தாளருக்கு போன் செய்தார். 'அவர் புது நாவலை எழுதிக் கொண்டிருக்கிறார்,' என்று பதில் கிடைத்தது.
'பரவாயில்லே, காத்திருக்கிறேன்!' என்றாராம் அந்த நண்பர்.
நிறைய சம்பாதித்தார். இன்னும் நிறைய செலவழித்தார். கடைசியில் விட்டுப் போனதென்னவோ கடன் தான். பொதுவாக வாழ்வின் பின் பிரபலமடையும் எழுத்தாளர்கள் அநேகம். ஆனால் இவரைப் பொறுத்தவரை வாழும் பொழுது பிரகாசித்த அளவு பின்னர் அவர் புகழ் பாடப் பெறவில்லை... எழுதிக் குவித்தவரை எளிதாக மறந்து விட்டார்கள் பலர்.
பஞ்ச்:
பூட்டிய அறைக்குள் அந்த நபர் கொல்லப்பட்டு கிடக்கிறார் செயரில் உட்கார்ந்தபடியே. அறை வெளியே பூட்டி இருக்கிறது. அறைச் சாவியோ அவர் பாக்கெட்டில். எப்படி நடந்தது கொலை? அவரது ஃபேமஸ் நாவல் ‘The Clue of the New Pin’ -இன் knot இது.
அட்டகாசமாக அவிழ்த்திருப்பார் முடிச்சை.