நோய்வாய்ப்பட்டிருந்த ஒரு சிறுமிக்கு ஒரு கதையை எழுதி படங்களும் வரைந்து அனுப்பினாள் அந்தப் பெண். பீட்டர் என்ற முயலின் கதை. படித்த எல்லோருமே அதை புகழ்ந்தனர். மகிழ்ந்து போனாள் அவள். ஒரு சின்ன புத்தகமாக அது வெளியானது. Peter Rabbit பிரபலமாயிற்று. வரவேற்பின் வேகத்தில் ஒவ்வொன்றாக எழுத, அடுத்த 23 பீட்டர் கதைகள் வெளியாகின. அந்த எழுத்தாளர்...
Beatrix Potter. ( 1866-1943)
அந்த முதல் கதை? முயல் குட்டி பீட்டர் ரொம்ப சுட்டி. கூடப் பிறந்ததுகளை மாதிரி அல்ல. அந்தப் பக்கம் மெக்கிரிகர் தோட்டத்துக்கு மட்டும் போய் விடாதே, என்று எச்சரித்துவிட்டு வெளியே போகிறாள் அம்மா முயல். கேட்குமா பீட்டர்? அங்கே தான் போகிறது. அதையும் இதையும் பிடுங்கி சாப்பிட்டுவிட்டு மாட்டிக் கொள்ளப் பார்க்கிறது. அடிபட்டு, மிதிபட்டு மயிரிழையில் தப்பி ஓடி வருகிறது. சொன்னால் புரியாத உலகத்தை அனுபவத்தால் புரிந்து கொள்கிறது. அம்மா டின்னர் தராமல் டீயைக் கொடுத்து படுக்க வைக்கிறாள்.
பீட்டர் கதைகள் (The Tale of Peter Rabbit) உலக பிரசித்தம். எல்லாமே கருத்துள்ளவை என்பது அதன் மற்றொரு பிளஸ்.
1 comment:
தகவல் சிறப்பு. இணையம் வழி படிக்க முயல்கிறேன்.
Post a Comment
உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!