'அப்பா, அந்திச் சூரியன்
அப்புறம் எங்கே போகுது?'
'ரேடியோவின் உள்ளிருந்து
பாட்டு எப்படி வருது?'
'கமலாவின் அப்பா மட்டும் ஏன்
காலில செருப்பு இல்லாமல் போறாரு?'
மழலைச் சிறுவனாய்
அன்று அவன் கேட்ட போது
'போய்த் தூங்குடா.'
'ஸ்கூலுக்கு டயமாச்சு, புறப்படு.'
'போய் புஸ்தகம் எடுத்துப் படி.'
என்றேன் அப்பா.
இன்று
கம்ப்யூட்டரின் முன்னால்
கவிழ்ந்திருக்கும் மகனிடம்
'டபிள் கிளிக் எப்படி பண்றது?'
'ஈ மெயில் ஐ.டி. எங்கே கிடைக்கும்?'
'ஸீ டிரைவ்னா என்ன?'
என்று கேட்கும்போது
'போங்கப்பா நான் பிஸி.'
'உங்களுக்கு லேசில் புரியாது.'
'தெரிஞ்சு என்ன செய்யப் போறீங்க?'
விரட்டத்தான் செய்வான், இயற்கை.
விசனப்பட என்ன இருக்கிறது?
<>
(21-12-2006 'குமுதம்' இதழில் வெளியான என் கவிதை.)
<>
(21-12-2006 'குமுதம்' இதழில் வெளியான என் கவிதை.)
<<<>>>
(படம் - நன்றி: கூகிள்)
14 comments:
ஹா... ஹா... உண்மை... ரசித்தேன்... வாழ்த்துக்கள்...
வணக்கம்
குமுதம் இதழில் வெளிவந்தமைக்கு வாழ்த்துக்கள் கவிதை நன்று ....
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அருமையான ஆக்கம். நிதர்ஸனமான உண்மையும் கூட.
அதையே தான் நானும் இன்று அப்படியே அனுபவித்து வருகிறேன்.
பகிர்வுக்கு நன்றிகள்.
//(21-12-2006 'குமுதம்' இதழில் வெளியான என் கவிதை.)//
பாராட்டுக்கள். வாழ்த்துகள்.
காலம் மாறிவிடுகிறது...
அழகிய கவிதை ரசித்தேன்....
வாழ்த்துக்கள்
இயற்கை.
விசனப்பட என்ன இருக்கிறது?
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்..!
இயற்கைதான்...சிறுகுழந்தைகளின் கேள்விகளுக்குப் பாங்காய் பதில் சொல்லவேண்டும்..
குமுதத்தில் வெளியானதற்கு வாழ்த்துகள் ஜனா!
அன்பின் ஜனா - முற்பகல் செய்யின் பிற்பகல் வீளையும் !
அட இதயே எனக்கு ஜஸ்ட் முன்னாலே இராஜராஜேஸ்வரி எழுதிட்டாங்களே ! இப்ப என்ன பண்றது ? ம்ம்ம்ம்
2006ல் குமுதத்தில் வெளியானது குறித்து மிக்க மகிழ்ச்சி - பாராட்டுகள் - நல்வாழ்த்துகள் .ஜனா .
நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா
அன்றே நீங்கள் சொல்லி இருந்தாலும் இன்றும் பொருந்தும் வார்த்தைகள்!
இயற்கை.
விசனப்பட என்ன இருக்கிறது?//
நன்றாக சொன்னீர்கள்.
ஆம். விசனப்பட ஒன்றும் இல்லை, ஏற்றுக் கொள்ள பழகுவதை தவிர.
கண்ணுக்குக் கண் பல்லுக்குப் பல் !
யானைக்குப் பானை சரியாப் போச்சே !
வாழ்த்துக்கள் !
:))!
நல்ல கவிதை!
நிதர்சனமான உண்மை தான்...
நல்ல சிந்தனை வீச்சு...
Post a Comment
உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!