Monday, October 7, 2013

நேராத நேர விரயங்கள்....


 
அன்புடன் ஒரு நிமிடம் - 46 
 
வீட்டுக்குள் நுழையும்போதே கௌதம் கடுகடு முகத்தில் இருந்தார்.
 
போன விஷயம் எல்லாம் நல்லபடியா நடந்திச்சா?”
 
ஓ முடிச்சிட்டேன் ஒரு வழியா.
 
அப்படியே கையலம்பிட்டு வா, சாப்பிடலாம்,” என்ற சாத்வீகனிடம், பசிக்கலேப்பா, கொஞ்ச நேரம் போகட்டுமே.” டி.வியில் உட்கார்ந்தார். ஏதோ ஒரு பழைய படம் ஓடிக்கொண்டிருக்க, கொஞ்சம் பார்க்கலாம் இதை!
 
சாப்பிடும்போது தான் கடுகடுவின் காரணம் சொன்னார். வள்ளிசா ஒண்ணரை மணி நேரம் வேஸ்ட் இன்னிக்கு!
 
அடடே என்னாச்சு, எங்கே போச்சு அந்த தொண்ணூறு மணித்துளிகள்?”
 
நம்ம பாலு இருக்கானே?”
 
உன்னோட பால்ய நண்பன்?”
 
அவன்தான். வழியில திடீர்னு பார்த்தேன். அட்மிஷனாம். மகனுக்கு. நீயும் வந்தா உதவியா இருக்கும்னு இழுத்துட்டு போயிட்டான். போய்ப் பேசிட்டு வந்ததில...
 
நேரம் காலியாயிட்டுது போல. த்சொ! த்சொ! என்று வருத்தம் காட்டினார், ஆருக்கும் தெரியறதில்லை நேரத்தோட அருமை.
 
அதான்!
 
இதை விளக்க உன்னை சில கேள்வி கேக்கறேன்.
 
கௌதம் உற்சாகமானார். அப்பா எதையும் அவர் பாணியில் அசத்தலாக சொல்வார்.
 
உன் சட்டையில இருக்கிற அஞ்சு பட்டனைப் போட எத்தனை நேரம் ஆகும்?”
 
என்ன ஒரு அரை நிமிஷம்...
 
உன் ஷூவைப் போட?”
 
ரெண்டு நிமிஷம்...
 
சுருக்கமா, வெளியே புறப்படறதானால்...?”
 
ஒரு இருபது நிமிஷம்போல ஆயிடும்.
 
டிராஃபிக்கில் சில சமயம் சிக்னலுக்காக நிக்கிறப்ப?’
 
அது ஆகும்... ஒரு சிக்னலுக்கு முப்பது செகண்டுன்னு பார்த்தால்கூட ஒரு நாளில் அரை மணி அதில் மட்டும்...
 
காண்டீனில் காபிக்காக காத்திருப்பதில்...?”
 
டோக்கன், காபி என்று தடவைக்கு கால் மணி.
 
இப்படி இந்த நேரம் எல்லாம் வேஸ்ட் ஆவதைத் தடுக்க வழியில்லையா?”
 
கௌதம் சிரிப்பை அடக்கிக்கொண்டார். எப்படிப்பா முடியும்? இதெல்லாம் தவிர்க்க முடியாத கால விரயங்கள்.
 
அப்படீன்னா அதெல்லாம் நினைச்சு வருத்தப் படறதில...
 
அர்த்தமில்லைன்னு உங்களுக்கே தெரியாதா?”
 
தெரியும். நல்லாவே தெரியும். இப்படி அனிச்சை செயல்களிலிருந்து ஆங்காங்கே அற்ப காரணங்களுக்காக நேருவது வரையில் அஞ்சும் பத்துமாக தினம் வேஸ்ட் ஆகிற அறுபது எழுபது நிமிஷங்களுக்காக நாம அலட்டறதில அர்த்தம் இல்லேன்னு நமக்கு நல்லாவே தெரியும்தானே?”
 
அப்புறம் எதுக்கு அந்த விவரம் எல்லாம் கணக்குப் போட்டுக்கொண்டு?”
 
இன்னும் உன்னை ஒரு கேள்வி கேட்கத்தான்!
 
?”
 
இப்படி தினம் ஒண்ணு,ரெண்டு மணி நேரம் கண்டபடி செலவாகிறதிலேயே நாம வருத்தப்படாதபோது ஒரு பையனின் படிப்புக்கு உதவி செய்யற விஷயத்துக்கு முக்கால் மணி நேரத்தை செலவிட்டதை வீண் என்று சொல்லலாமா?”
 
யோசித்த கௌதம் சொன்னார், இதை விளக்க நீங்க எடுத்துக்கொண்ட நேரம் வீணில்லை அப்பா!
 
('அமுதம்' ஜூன் 2013 இதழில் வெளியானது.)
<<<>>>
படம் - நன்றி: கூகிள் )
 

12 comments:

Yaathoramani.blogspot.com said...

அருமையாகச் சொன்னீர்கள்
வீண் விரயம் என்பதெல்லாம்
காலம் பொறுத்த விஷயமில்லை
நாம் செய்யும் வேலை பொறுத்த விஷயம்தான்
பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

ராஜி said...

நிச்சயமாய் நேரம் வீண் போகலைதான்

வை.கோபாலகிருஷ்ணன் said...

“இதை இந்த குட்டியூண்டு கதை மூலம் விளக்க நீங்க எடுத்துக்கொண்ட நேரமும் வீணில்லை, Mr. K B Jana Sir. ;)

வை.கோபாலகிருஷ்ணன் said...

('அமுதம்' ஜூன் 2013 இதழில் வெளியானது.)

பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

திண்டுக்கல் தனபாலன் said...

அவர் பாணியில் அசத்தல் விளக்கம்...!

இராஜராஜேஸ்வரி said...

அப்பா அவர் பாணியில் அசத்தலாக சொன்னவை அமுதம் தான் .... பாராட்டுக்கள்..!

தேன்மதுரத்தமிழ் கிரேஸ் said...

//யோசித்த கௌதம் சொன்னார், “இதை விளக்க நீங்க எடுத்துக்கொண்ட நேரம் வீணில்லை அப்பா!”
// நச்சுனு புரிதலைச் சொன்ன வரி..அருமை!

Anonymous said...

வணக்கம்

கதை அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

தி.தமிழ் இளங்கோ said...

“ நேரம் வேஸ்ட் “ என்று நெருங்கிய இடத்தில் பேசலாம். மற்ற இடத்தில் மூச். இதுதான் எல்லோரும் செய்வது. கணக்கு பார்க்க வேண்டியது நேரத்தையா அல்லது அந்த நேரத்தில் செய்த செயலையா என்று சொல்கின்ற சிறுகதை.

கரந்தை ஜெயக்குமார் said...

பாராட்டுக்கள்

ADHI VENKAT said...

மகனுக்கு அழகாக நேரத்தை செலவிட்டு, மகனுக்கு புரிய வைத்த அப்பா, சூப்பர் அப்பா தான்...:)

ராமலக்ஷ்மி said...

சிந்திக்க வைக்கும் கதை. சிறப்பு. முடித்த விதமும் அருமை.

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!