Wednesday, October 30, 2013

நல்லதா நாலு வார்த்தை - 21



'நம்மைத் தவிர யாரும்
தர இயலாது

நமக்குச்சிறந்த

அறிவுரை
.'

- Cicero
('Nobody can give you wiser advice than yourself')
<>
'அஞ்சும் விஷயங்களை விட
ஆசைப்படுவனவற்றிலேயே

ஆபத்து அதிகம்
.'

-John C. Collins
('There is often less danger in the things
we fear than in the things we desire.')
<>
'உன்னை விட்டுக் கொடுக்காதே
நீ மட்டுமே உனக்கிருப்பது
.'

- Janis Joplin
('Don't compromise yourself. You're all you've got.')
<>
 'மற்றவர் செய்ய இயலாததை
செய்வது திறமை
.
திறமையினால் செய்ய இயலாததை

செய்வது மேதைமை
.'

-Will Henry
("To do what others cannot do is talent.
To do what others cannot do is genius.')
<>
'விளக்கம் தந்து கொண்டிருக்காதீர்கள்.
விசுவாச நண்பர்களுக்கு அது தேவையில்லை

விரோதிகள் அதை நம்புவதில்லை
...'

- Elbert Hubbard
('Never explain. Your friends do not need it and
your enemies will not believe it anyway.')
<>
'இலக்கு அதேதான்: வாழ்க்கை;
விலையும் அதேதான்: வாழ்க்கை
''

- James Agee
('The goal is the same: life itself; and
the price is the same: life itself.)

<>
'முதலிலெழும் ஆசையை
மூழ்கடிப்பது எளிது, தொடர்ந்து

முளைக்கும் மற்றவற்றை

மகிழ்விப்பதை விட
!'

-La Rochefoucauld
('It is very much easier to extinguish a first
desire than to satisfy those which follow it.')
<<<>>>

(படம்- நன்றி: ராமலக்ஷ்மி ராஜன்.)

16 comments:

கோமதி அரசு said...

விளக்கம் தந்து கொண்டிருக்காதீர்கள்.
விசுவாச நண்பர்களுக்கு அது தேவையில்லை
விரோதிகள் அதை நம்புவதில்லை...'//
உண்மைதான்.
பொன்மொழிகள் அருமை.

ராமலக்ஷ்மி said...

அனைத்தும் அருமை. சிறப்பான தமிழாக்கம்.

என் படத்தைப் பயன்படுத்தியிருப்பதில் மகிழ்ச்சி:)!

Rekha raghavan said...

'இலக்கு அதேதான்: வாழ்க்கை;
விலையும் அதேதான்: வாழ்க்கை'' .

சிந்திக்க வைக்கும் வார்த்தைகள்.

ஏழும் அருமை!

தேன்மதுரத்தமிழ் கிரேஸ் said...

அருமையான மொழிகள், பகிர்ந்தமைக்கு நன்றி!

வை.கோபாலகிருஷ்ணன் said...

எல்லாமே அருமை.

இருப்பினும் எனக்கு மிகவும் பிடித்துள்ளது வில் ஹென்ரி சொல்லியுள்ள :-

"To do what others cannot do is talent.
To do what others cannot do is genius.'

'மற்றவர் செய்ய இயலாததை
செய்வது திறமை.

திறமையினால் செய்ய இயலாததை
செய்வது மேதைமை.'

பகிர்வுக்கு நன்றிகள்.

நம்பள்கி said...

நல்ல தமிழ் மொழி பெயர்ப்பு.
தமிழ்மணம் வோட்டு +1

இராஜராஜேஸ்வரி said...

'விளக்கம் தந்து கொண்டிருக்காதீர்கள்.
விசுவாச நண்பர்களுக்கு அது தேவையில்லை
விரோதிகள் அதை நம்புவதில்லை.

அருமையான வரிகள்..!

கவியாழி said...

அத்தனையும் அற்புதம்

திண்டுக்கல் தனபாலன் said...

அனைத்தும் அருமை....

திறமையினால் செய்ய இயலாததை செய்வது மேதைமை...!

வாழ்த்துக்கள்...

Anonymous said...

'நம்மைத் தவிர யாரும் தர இயலாது நமக்குச்சிறந்த அறிவுரை.'////

உண்மையே .. இதில் குழப்பமே வேண்டாம் .
அருமை.

நிலாமகள் said...

முதலிலெழும் ஆசையை
மூழ்கடிப்பது எளிது, தொடர்ந்து
முளைக்கும் மற்றவற்றை
மகிழ்விப்பதை விட!'

puthumai!

'விளக்கம் தந்து கொண்டிருக்காதீர்கள்.
விசுவாச நண்பர்களுக்கு அது தேவையில்லை
விரோதிகள் அதை நம்புவதில்லை.

arumai!

Anonymous said...

வணக்கம்
அனைத்தும் அருமை வாழ்த்துக்கள்

இனியதீபாவளி வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

தி.தமிழ் இளங்கோ said...

காலம் மாறினாலும் அனுபவ வரிகள் என்றுமே சொல்லுகின்றன உண்மையை.
தேர்ந்தெடுத்த பொன்மொழிகளுக்கு நன்றி!
எனது உளங் கனிந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள்!

”தளிர் சுரேஷ்” said...

சிறப்பான பொன்மொழிகள்! இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

Anonymous said...

அனைத்து வரிகளும் அருமை...ஆனால் எனக்கும் மிகவும் பிடித்த வரிகள் விளக்கம் தந்து கொண்டிருக்காதீர்கள்...

ரிஷபன் said...

உன்னை விட்டுக் கொடுக்காதே
நீ மட்டுமே உனக்கிருப்பது.'

ரொம்ப பிடிச்சது !

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!