'தோல்வியிலிருந்து தோல்விக்கு,
உற்சாகம்
தொலையாமல் தாவுவதே வெற்றி.'
-Winston Churchill
('Success is stumbling from failure to
failure with no loss of enthusiasm.')
<<>>
'சொல்லவோ
சொல்லாமலிருக்கவோ
இயலாததை,
சொல்லுவது இசை.'
- VictorHugo
('Music expresses that which cannot be said and on
which it is impossible to be silent.')
<<>>
'மிக நிச்சயமாய் இந்த
மகா பிரபஞ்சத்தில் நாம்
முன்னேற்ற முடியுமென்கிற
ஒரே இடம்
நம்மிடம் தான்'
-Aldous Huxley
('There is only one corner of the universe you
can be certain of improving and that is your own self.')
<<>>
'தொட்டிடாததொரு
அழகிய மலர் மணம்,
தோட்டத்தையே ஆனந்த
இடமாக்குவது போன்றது
இடமாக்குவது போன்றது
அன்பு.'
-Helen Keller
('Love is like a beautiful flower which I may not
touch, but whose fragrance makes the garden
a place of delight just the same.')
<<>>
'வாழ்க்கையை நேசிக்கிறோம்
வாழப் பழகி விட்டதால் அல்ல,
நேசிக்கப் பழகி விட்டதால்!'
-Friedrich Nietzche
('We love life not because we are used to
living but because we are used to loving.')
<<>>
'ஒளி பரப்பிட
வழி இரண்டு:
மெழுகுவர்த்தியாயிருப்பது
அல்லது
அதைப் பிரதிபலிக்கும்
ஆடியாயிருப்பது.'
-Edith Wharton
('There are two ways of spreading light to
be the candle or the mirror that reflects it.')
<<>>
'உவப்பென்பது
உரியவர்களாக இருப்பது
உடையவர்களாக இருப்பதல்ல.'
- Elizabeth Harvey
('Happiness is belonging, not belongings.')
*******
(படம்- நன்றி : கூகிள்)
11 comments:
//'வாழ்க்கையை நேசிக்கிறோம்
வாழப் பழகி விட்டதால் அல்ல,
நேசிக்கப் பழகி விட்டதால்!'//
;)))))
அருமையான பொன்மொழிகள். பகிர்வுக்கு நன்றிகள்.
முதலாவதும் கடைசி இரண்டும் தலையாட்ட வைத்தவை.
பொன்மொழிகள் பகிர்வுக்கு நன்றி!
நேசிக்கப் பழகுவதும், வெற்றியும் மிகவும் ரசித்தேன்...
பள்ளிக் குழந்தைகளிடம் ஒரு சுவாரஸ்யமான உரையாடல்... பறப்பதற்கு தயாராக இருங்கள்...!
Link : http://dindiguldhanabalan.blogspot.com/2013/10/If-you-are-a-BIRD.html
மனசுக்கு இதமாய் இருக்கிறது.நன்றி.
'தொட்டிடாததொரு
அழகிய மலர் மணம்
தோட்டத்தையே ஆனந்த
இடமாக்குவது போன்றது
அன்பு.'
மணம் கமழ்ந்து மனம் நிறைக்கும் வரிகள்..பாராட்டுக்கள்..!
அருமையான மொழிகள்...
முன்னேற்றம் நம்மிடம் தான்.... - நம்பிக்கையூட்டும் வார்த்தைகள்.
மொழிபெயர்ப்பு அருமை.
கடைசியானதை வெகுவாக ரசித்தேன்.
அன்பின் ஜனா - பொன்மொழிகள் நன்று - மொழி பெயர்ப்பினிற்கும் பகிர்வினிற்கும் நன்றி - நல்வாழ்த்துகள் -நட்புடன் சீனா
தொட்டிடாததொரு
அழகிய மலர் மணம்,
தோட்டத்தையே ஆனந்த
இடமாக்குவது போன்றது
அன்பு.'
வாழ்க்கையை நேசிக்கிறோம்
வாழப் பழகி விட்டதால் அல்ல,
நேசிக்கப் பழகி விட்டதால்!'//
அன்பாய், நேசிக்க கற்றுக் கொண்டால் வாழ்க்கை சொர்க்கம் தான்.
அருமையான பொன்மொழிகள் பகிர்வுக்கு நன்றி.
Post a Comment
உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!