Friday, October 11, 2013

நல்லதா நாலு வார்த்தை... 19


 
'விழ்க்க முடிவதை
அறுக்காதீர் .'

-Joseph Joubert 

('Never cut what you can untie.')
 
<> 

'எப்பவேனும்தான் நமைப் பற்றி
எண்ணுகிறார் மற்றவர்
என்பதறிந்தால்,
என்ன எண்ணுவர் 
என்றெவரும் கவலை கொளார்.'

- Eleanor Roosevelt
('You wouldn't worry so much about what others
think of you if you realized how seldom they do.')

<> 

'ஆடம்பரம் என்பது... 
அடுத்தவர் வாங்குவது.'
 
- David White
('Luxuries are what other people buy.')

<> 
'விரும்பும் அத்தனை
விஷயங்களும் கிடைக்காவிடின்  
விரும்பாத எத்தனை
விஷயங்கள் கிடைக்காமல் உள்ளதென 
எண்ணிப் பாருங்கள்'

- Oscar Wilde
('If you don't get everything you want, think of
the things you don't get that you don't want.')
 <>

 'செல்லத் தகுந்த 
எந்த இடத்துக்கும் 
இல்லையொரு 
குறுக்கு வழி.'

-HelenKeller 
('There are no shortcuts to any place worth going.')
 <>

'எவரையும் நம்பிக்கை 
இழக்க செய்துவிடாதீர்,  
அவரிடம் இருப்பதெல்லாம்
அஃ தொன்றாகவே இருக்கலாம்.' 

- Anonymous 
('Never deprive someone of hope;
it may be all they have.')
 
<> 

'மனிதர்
ஆக முடியாத நிலைக்கான ஆறுதலை
ற்பனையும்,
அவர்கள்
ஆகியிருக்கிற நிலைக்கான ஆறுதலை
நகைச்சுவையும் 
அளிக்கின்றன.'

-Albert Camus
('Imagination consoles people for what they cannot be,
and humour for what they actually are.')
<> 

'அல்லல்களே
அறிமுகப் படுத்துகின்றன
நம்மை நமக்கு.' 

- Anonymous 
('Adversity introduces a man to himself.') 

<<<<>>>> 
(படம்- நன்றி; கூகிள்)

14 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

எல்லாமும் அருமை.

//'அவிழ்க்க முடிவதை அறுக்காதீர் .'//

ஆஹா, நூலுக்கு மட்டுமின்றி, நல்ல நட்புக்கும் இது பொருந்துகிறதே ! ;)

மிக்க மகிழ்ச்சி.

அதனால் தான் அவிழ்க்க மட்டுமே நான் எப்போதும் விரும்புகிறேன்.

ஒருபோதும் நானாக அறுக்க மாட்டேன்.

பகிர்வுக்கு நன்றிகள்.

இராஜராஜேஸ்வரி said...

'ஆடம்பரம் என்பது
அடுத்தவர் வாங்குவது.'

அருமையான வார்த்தைகள்..!

Yaathoramani.blogspot.com said...

அருமையான் பழமொழிகள்
மிகக் குறிப்பாக அவிழ்க்க முடிந்ததை
அறுத்துவிடுதல்
பகிர்வுக்கும் தொடரவும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

தி.தமிழ் இளங்கோ said...

ந்ல்லதாக நாலு வார்த்தை! செவிக்கு உணவு!


திண்டுக்கல் தனபாலன் said...

அனைத்தும் அருமை... நன்றி...

ராஜி said...

குறுக்கு வழியை பற்றிய வார்த்தை சூப்பர்

தேன்மதுரத்தமிழ் கிரேஸ் said...

ஒன்றை மட்டும் குறிப்பிட முடியாது, அத்தனையும் அருமையான மொழிகள்! தமிழாக்கத்தோடு பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி!

வெங்கட் நாகராஜ் said...

//'விரும்பும் அத்தனை
விஷயங்களும் கிடைக்காவிடின்
விரும்பாத எத்தனை
விஷயங்கள் கிடைக்காமல் உள்ளதென
எண்ணிப் பாருங்கள்' //

அத்தனையும் நன்று. மேலே சொன்னது மிகவும் பிடித்தது.

ரிஷபன் said...

அனைத்தும் அருமை.. !

ADHI VENKAT said...

அருமையான நாலு வார்த்தைகள்....

Anonymous said...

உங்கள் நாலு வார்த்தைகள் சில நேரங்களில் மனதிற்கு மருந்தாகவும் சில நேரங்களில் அறிவுக்கு விருந்தாகவும் அமைகிறது...

ராமலக்ஷ்மி said...

அனைத்தும் மிக அருமை. சிறப்பான தமிழாக்கம்.

ஷைலஜா said...

நாலுவார்த்தையைப்பார்த்து உடனேயே நாலுவார்த்தை பாராட்டாத என்ன பெண்ணோ நான் என என்னையே நாலுவார்த்தையில்(முட்டாள்:) திட்டிக்கொள்கிறேன் நாலெழுத்து கே பி ஜனா! நன்றாக இருக்கு மொழிபெயர்ப்பு. பாராட்டு! .தமிழில் வாசித்தால் அதுவும் ஒரு அழகுதான்

கோமதி அரசு said...

எவரையும் நம்பிக்கை
இழக்க செய்துவிடாதீர்,
அவரிடம் இருப்பதெல்லாம்
அஃ தொன்றாகவே இருக்கலாம்.' //
அருமையான நாலுவார்த்தை.
அனைத்தும் அருமை.
பகிர்வுக்கு நன்றி.

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!