Tuesday, August 20, 2013
நல்லதா நாலு வார்த்தை - 14
‘அனைத்து
மனித
விவேகத்தையும்
அடக்கிவிடலாம்
இரண்டே
வார்த்தையில்:-
நம்பு, காத்திரு.’
- Alexander Dumas
(‘All human wisdom is summed up in two words; wait and hope.’)
<>
‘மௌனம் எனும் தூக்கம்
ஊட்டுவது
விவேகம்.’
-Francis Bacon(‘Silence is the sleep that nourishes wisdom.’)
<>
‘நேற்றுப் படித்த பாடங்களுக்கு
நேர்மாறாக இருப்பினும் சரி
புதிய பாடங்களைக் கற்க
தயாராக இரு.’
-Ellen DeGeneres
(‘Be open to learning
new lessons even if they
contradict the lessons
you learned yesterday.’)
<>
‘இடர்ப்பாடுகளை சந்திக்காதவன் தன்
இயல் திறன் அறியாதவன்.’
- Ben
Jonson
(‘He knows not his own
strength that hath
not met
adversity.’)
<>
‘தன்னடக்கமுள்ள
மனிதன்
பாராட்டப்படுகிறான்
மக்கள்
அவனைப்பற்றிக்
கேள்விப்பட்டால்.’
-Ed Howe
A modest man is usually admired – if people ever hear of him.’
<<<>>>
Friday, August 16, 2013
ஒரே ஒரு வார்த்தை...
மெல்லத் துயிலெழுந்து
ஒரு கொட்டாவியை வெளிவிட்டபோது எட்டாகியிருந்தது மணி. உள்ளே எட்டிப் பார்த்தபோது
யாழினி அதற்குள் எழுந்து குளித்து பூஜை முடித்துவிட்டு பிஸியாக இயங்கிக்
கொண்டிருந்ததைக் கவனித்தான் கிஷோர். ஞாயிற்றுக் கிழமையானாலும் அவளுக்கு வேலை
குறைவில்லை போல.
என்ன
செய்து அவளை சந்தோஷப் படுத்தலாம் அன்று என யோசித்தான்.
சில வழிகள் புலப்பட்டன.
அன்றைக்கான அவளின் தையல் வகுப்புக்கு கிளம்பினாள் யாழினி. சபாஷ், அவள் வருவதற்குள் முடித்து விடலாம்!
டிபன் சாப்பிட்டான பின் முதல் வேலையாக கார்டனில் காலை வைத்தான். ரோஸ், சிவப்பு, வெள்ளை என்று தொட்டிகளில் வைத்திருந்த ரோஜா செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சி மண்ணைக் கிளைத்து உரமிட்டான். ஒவ்வொன்றாக பார்த்து ஆராய்ந்து சில செடிகளுக்கு கிளையை நறுக்கி பதியம் வைத்தான். வந்ததும் பார்த்து யாழினி எத்தனை ரசிப்பாள் இதை என்று நினைக்கும்போதே பரவசமாயிருந்தது.
அடுத்து புத்தக அலமாரிக்கு வந்தான். குவிந்து கிடந்த அத்தனை புத்தகங்களையும் வகை பிரித்து ஒழுங்காக அடுக்கினான். வந்ததும் பார்த்து யாழினி எத்தனை ஆச்சரியப் படுவாள்!
பழைய ஆங்கில தமிழ் தினசரிகளை அடுக்கிக் கட்டி வைத்தான்.
யாழினி வந்தாள். ஒவ்வொன்றாகக் காட்டினான். “ஐயோ, எத்தனை மெனக்கிட்டு... எல்லாம் நீங்களே பண்ணினீங்களா?”
“ஆமா, எல்லாம் உன்னைக் கவரத்தான் பண்ணினேனாக்கும்!” என்றான் பெருமையாக.
அவள் முகத்தில் சுடர் விடத் தொடங்கியிருந்த பரவசம் சட்டென்று அணைந்து போனது.
அவனுக்கு ஏமாற்றமாகிப் போனது.
என்னதான் அப்புறம் சிரித்து பேசினாலும் அவள் அப்படி ஒன்றும் மகிழ்ந்து போய்விடவில்லை என்பது உறுத்திக் கொண்டே இருந்தது.
“புரிஞ்சுக்கவே முடியலே என்னால இவளை!” என்று ஆரம்பித்து அத்தனையையும் சொன்னான்
எல்லாவற்றையும் வரி விடாமல் கேட்டுக் கொண்டார் ராகவ்.
ஒரு புன் சிரிப்பு அவர் முகத்தில் அரும்பிற்று.
“வீடு நிரம்ப பூச்செடிகள் இருந்தா எத்தனை அழகாயிருக்கும்னு அடிக்கடி சொல்லுவாள் மாமா! வீட்டுக்கு வர்றவங்க ரோஜா செடிகளை ரொம்ப ரசிப்பாங்களாம். புத்தகங்கள், துணி மணிகள்னு வீட்டில ஒவ்வொரு பொருளும் நீட்டா அடுக்கப்பட்டு உரிய இடத்தில் இருப்பதன் சிறப்பையும் வனப்பையும் நிறைய முறை சொல்லியிருக்கா. எத்தனை சிரமப்பட்டு எல்லாம் செய்தேன்? கடைசியில் அவள் அத்தனை மகிழ்ந்ததாத் தெரியவில்லையே?”
“நீ செய்ததெல்லாம், சிரமப்பட்டதெல்லாம் சரிதான் கிஷோர். ஒரே ஒரு வார்த்தை. அதை மாற்றிச் சொல்லியிருந்தால் போதும். அவள் அகமகிழ்ந்திருப்பாள்!”
இவனுக்குப் புரியவில்லை. “ஒரே ஒரு வார்த்தை?”
“ஆமா, நீங்களே பண்ணினீங்களா என்று அவள் கேட்டதற்கு நீ என்ன சொன்னாய்?”
“எல்லாம் உன்னைக் கவரத்தான் பண்ணினேனாக்கும் அப்படீன்னு சொன்னேன்.”
“அதான். அந்த வார்த்தைதான்!”
“எந்த வார்த்தை?”
“உன்னைக் கவரத்தான் அப்படீன்னு சொன்னாயில்லையா? உன்னால் கவரப்பட்டுன்னு சொல்லியிருக்கணும்.”
அவன் விழிக்க அவர் தொடர்ந்தார்.
“ஆமா, அவள் சொன்ன நல்ல விஷயங்களை செய்து அவளை மகிழ்விக்கிறாய் என்பதை விட அந்த நல்ல விஷயங்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து அதை சந்தோஷமாக செய்தாய் என்பது தானே அவளுக்கு அதிக மகிழ்ச்சி தருவது? அந்த செயல்கள் உனக்கு ரசனையும் சந்தோஷமும் அளித்தது என்பதே அவள் பெறும் பெரும் சந்தோஷம்!”
“நல்லதொரு விஷயம் சொன்னீங்க!” என்றான்.
('அமுதம்' ஏப்ரல் 2013 இதழில் வெளியானது)
<<>>(படம் - நன்றி: கூகிள்)
Sunday, August 11, 2013
நல்லதா நாலு வார்த்தை -13
‘அறிவென்பது
அனுபவத்தின்
குழந்தை.’
- Leonardo da Vinci
(‘Knowledge is the child of experience.’)
<>
‘நாமல்லால் வேறாரும்
நமை இகழ முடியாது.’
- Josh Billings
(‘No one can disgrace us but ourselves.’)
<>
‘எல்லாவற்றுக்கும்
அதன்
அழகுண்டு, ஆனால்
எல்லாரும்
அதைக்
காண்பதில்லை’
- Confucius
(‘Everything has its beauty, but not
everyone sees it.’)
<>
‘புதியவர்கள் என்போர்
புலரக்
காத்திருக்கும்
நண்பர்களே!’
- Rod McKuen
(‘Strangers
are just friends waiting to happen.’)
<>
‘விஞ்ஞானபூர்வமாக
பொருட்களை
பிரிக்கலாம்
மூவகையாக:
வேலை
செய்யாதன,
உடைந்து
போவன,
தொலைந்து
போவன.’
-Russel Baker
(‘Objects can be classified
scientifically into three major categories:
those that don‘t work, those that break down and those that
get lost.’)
<>
‘எப்படி
அவர்கள்
மலர
வேண்டியவர்களோ
அப்படி
அவர்களை
நடத்துங்கள்.
எந்தஅளவு அவர்களால்
பரிமளிக்க
முடியுமோ
அந்த
அளவு ஆவதற்கு
உதவியவர்
ஆவீர்கள்!’
– Goethe
(‘Treat people as if they were what
they ought to be and
you help them to become what they are
capable of being.’)
<>
‘இன்றொரு தினம்
இரு ‘நாளை’க்கு இணை.’
-Benjamin Franklin
(‘One today is worth two tomorrows.’)
<<<>>>
Subscribe to:
Posts (Atom)


