Tuesday, May 16, 2023

முதல் படமே...

 


‘For Your Eyes Only’(James Bond) படத்தில் நடித்துக் கொண்டிருந்த மனைவி Cassandra Harris ஐப் பார்க்க செட்டுக்கு வந்தார் அந்த நடிகர். அவர் சம்மதிச்சா என் அடுத்த ஜேம்ஸ் பாண்ட் அவர்தான் என்றாராம் தயாரிப்பாளர் Albert Broccoli.

அந்த நடிகர் Pierce Brosnan. இன்று பிறந்தநாள்!
ஆனால் நடிகர் விரும்பியும் அது கைகூடவில்லை அப்போது. 'The Living Daylights' -இல் நடிக்க முடியாது போயிற்று, பிரபல ‘Remington Steele’ சீரியலில் காண்ட்ராக்டில் நடித்துக் கொண்டிருந்ததால்! இவரைவிட வருந்தியது இவர் மனைவி.
1995. 'Golden Eye'-இல் தொடங்கி நச்சென்று நாலு படம். 'Tomorrow Never Dies', 'The World is not Enough', 'Die Another Day'.
Sean Connery க்குப் பின் ஜேம்ஸ் பாண்ட் பாத்திரத்துக்கு ஒரு தனி ஸ்டைலை கொடுத்த நடிகர் இவர்தான் என்று நினைக்கிறேன். அவருக்குப் பிடித்த பாண்ட் நடிகரும் கானரிதான். அதனால் ரோல் நல்ல சவாலாக இருந்ததாம்.
வாயின் வலது மேல் ஓரமாக வடு ஒன்று இருக்கும். புண்ணியம் கட்டிக் கொண்டது 'Tomorrow Never Dies' படத்தின் சண்டைக் காட்சி!
உலகின் 50 அழகிய மனிதர்களில் ஒருவராக People’s Magazine தேர்ந்தெடுத்தது இவரை. (1991).
‘நான் முதன் முதலில் பார்த்த படமே ஜேம்ஸ்பாண்ட் படம்தான்!’ என்கிறார். 'Goldfinger'. நடிகராக வேண்டும் என்ற ஆசையைத் துளிர்க்க விட்டதும் அந்தப் படம்தான். அப்பா பிரிந்து சென்று விட்டதால் அதீத அன்புடன் அம்மாவால் வளர்க்கப் பட்டவர். பதினொரு வயதிலேயே ஆறடி உயரம்.
தவிர, நிறைய வெற்றிப் படங்கள்! ‘Dante’s Peak’, ‘The Thomas Crown Affair,’ பிரபல Roman Polanski யின் ‘The Ghost Writer.’ அப்புறம் 2017 இல் The Foreigner. (Jackie Chan உடன்) மிகப் பிடித்திருந்ததாம் 'Mrs. Doubtfire' இல் நடித்தது.
Quote? ‘வெற்றியை விரும்பினேன் அதற்காக உழைத்தேன் கொஞ்சம் திறமை இருந்தது. தீட்டிக் கொண்டேன். அதிர்ஷ்டமும் சேர்ந்துகொண்டது.’

No comments:

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!