Monday, May 1, 2023

அந்த மெஸ்மெரிசக் குரல்!


காரிருளில் மிதந்து வருகிறது காதலனின் பாட்டு. அந்த மீனவப் பெண் காதில் பட்டுத் தெறிக்கிறது. இதயத்தில் தைக்கிறது. தாள முடியாமல் தன் காதைப் பொத்திக் கொள்கிறாள். மயக்கும் அந்தக் குரலிருந்து மீள முடியாமல்!

“மானச மைனே வரு… மதுரம் நுள்ளித் தரு…” ‘செம்மீன்' மலையாளப் படத்தின் செம்மையான சீன். அந்த மெஸ்மெரிசக் குரல்!
மன்னா டே! இன்று பெர்த் டே!
இன்னாடே, இன்னாடேன்னு இனிமையா பாட்டுக்களைக் கொடுத்தவர்.
ஹிந்தி பின்னணி உலகின் டாப் 5 M களில் ஒருவர். (Mohamad Rafi, Mukesh, Mahendra Kapoor, Manna Dey, Talat Mehmood) க்ளாஸிகல் இசை பயின்றவர். ராஜ் கபூருக்கும் பாடியிருக்கிறார், ரிஷி & ரந்திர் கபூருக்கும்!
நாம் விரும்பிக் கேட்கும் ரஃபி விரும்பிக் கேட்பது இவர் பாடல்களைத்தான் (என்பாராம் ரஃபி.)
1942. டிகிரியை வாங்கிய கையோடு உதவி இசையமைப்பாளராக ஆரம்பித்தவர் நடிகை சுரையாவுடன் பாடிய பாட்டு ஹிட்டாக, பின்னணி பாடகர் ஆனார். 50 களும் 60 களும் பொற்காலம். 1957 -இல் மட்டும் 95 இந்திப் பாடல்கள்.
எதிர் வீட்டுப் பெண்ணுக்கு பாட்டு என்றால் உயிர். காதலிக்கிற இவனுக்கோ கானம் வராது. கட்டிலுக்கு அடியில் இருந்து நண்பன் பாட, வாய் அசைக்கிறான். காதல் கை கூடும் போதும் களத்தில் குதிக்கிறார் அவளது பாட்டு வாத்தியார். போட்டிப் பாட்டு ஆரம்பம். தாவி தவ்விக் குதித்துப் பாடி, மாடி ஜன்னலுக்கு வந்துவிடுகிறார் வாத்தியார் மெகமூத். அசத்தலாக அவருக்குப் பின்னணி பாடியவர் மன்னாடே. Padosan (இந்தி ‘அடுத்த வீட்டுப் பெண்') இல் ‘Ek Chatur Naar..’
How versatile a singer he was… என்பதைச் சொல்லும் (பாடும்) பாடல் ஒன்று உண்டு. கேட்கக் காது போதாது ரகம். Roshan இசையமைத்த ‘Laga Chunri Mein Daag..' (Dil Hi To Hai) சங்கதிகளும் கமகங்களும் பொங்கி வழியும் அந்தப் பாடலை மிக என்றால் மிக அற்புதமாக.... High ptch பாடும்போது இன்னும் மிருதுவாகும் குரல்!
ராஜ்கபூரின் மிகப் புகழ் பெற்ற வேகப் பாடல்களையும் சோகப் பாடல்களையும் இவர்தான் பாடியிருப்பார். கேட்டுச் சலிக்காத ‘Dil Ka Hal Sune Dilwala..’‘Mud Mudke na Dekh…’ (Shree 420) ‘Ae Bhai Jara Dekh ke Chalo..’ (Mera Naam Joker)
ஒரே ஒரு முறை கேட்டுப் பாருங்க, அந்த "ஆஜா ஸனம்.. மதுரு சாந்த்னி மே ஹம்.." (Chori Chori)) பாடலை! நானோ செ.மீ. அகலம் கூட இராத அந்த மிக மெல்லிய குரலை! அசராதிருக்க வாய்ப்பில்லை.
‘Waqt’ படத்தில் பால்ராஜ் சாஹ்னி கிரஹப்பிரவேச விழாவில் தன் மனைவியை வர்ணித்து பாடும் ‘Yeh Mere Zohra Jabhi…’ பாடலில் இவர் குரல் ஒரு ஜாலியான இனிமையை வழங்கும் என்றால் ‘Mere Huzoor’ படத்தில் ராஜ் குமார் பாடுவதாக வரும் ‘Jhanak Jhanak Tore Bhaje..’ சரணத்தில் இன்னும் இன்னும் என்று இறங்கிக் கொண்டே போகும்போது சிலிர்க்கும்.
Sholay யில் அந்த ‘Yeh Dosti..’ Bobby யில் இந்த ‘Na Mangoon Sona Chandi..’ சொல்லிக் கொண்டே இருக்கலாம் அவர் பாடல்களைக் கேட்டுக்கொண்டே...

>><<>><<

1 comment:

வெங்கட் நாகராஜ் said...

அவர் பாடிய பாடல்கள் அனைத்தும் அருமை.., மிகவும் ரசித்த ஒரு பாடகர்.

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!