'Aawara', 'Shree 420', 'Mera Naam Joker', 'Bobby', 'Henna'...
இத்தனை வெற்றிப் படங்களுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு ராஜ்கபூர் படங்கள் என்பதைத் தவிர. என்ன அது?
அத்தனையும் எழுதியவர் ஒருவரே. K. A. Abbas.
இன்று பிறந்த நாள்!
1963 இல் அந்த படம் வந்தது ‘பட்டணமும் சொப்பனமும்'. (‘Sheher Aur Sapna’) கனவுகளுடன் மாநகரில் காலடி எடுத்து வைக்கும் ஜோடி.. தங்க ஓர் குடில் கிடைக்காமல் தெருவோரக் குழாய்களில் குடித்தனம் நடத்துவதும் எதிர்கொள்ளும் இன்னல்களும்… அப்படி ஒன்றும் போர் அடிப்பது இல்லை ஆர்ட் படங்கள் என்று காட்டினார். தான் பார்த்த நாகரிக ஜோடி ஒன்று, சந்தித்து பிரியும்போது அவன் அவளிடம் சொன்ன வார்த்தைகளைக் கவனித்த ஹீரோ இவளிடம் அதேபோல், “டாட்டா டார்லிங்!” என்று வெட்கம் பொங்கச் சொல்லிவிட்டு ஓடுவதும், தெரு முனையில் தடுக்கி விழுவதும்... அந்த இடத்தை ரசிக்காதவர் இல்லை. அவார்டுகளும் பாராட்டுக்களும் பெற்ற படம். ரியல் உணர்வுடன் படமாக்க மும்பை தெருக்களில் அலைந்து பார்த்தாராம்.
'Aawara' பற்றிச் சொல்லத் தேவையில்ல. 'திரைக்கதை எழுதுவது எப்படி?' என்பது அதன் மற்றொரு பெயர். ஆம், கற்றுக் கொள்ளலாம் தி.கதை எழுத! அப்படி எழுதியிருப்பார் அப்பாஸ்.
மலையாளத்தின் மதுவும் இந்தியின் அமிதாப்பும் நடித்த ‘Saat Hindustani’ என்ற இவரது அவார்டு படம் நினைவிருக்கலாம். சோவியத் டைரக்டருடன் சேர்ந்து பணியாற்றிய ‘Pardesi’ இங்கேயும் அங்கேயும் பேர் வாங்கியதோடு கேன்ஸ் படவிழாவிலும் பங்கேற்று…
பட்டணத்துக்கு வந்த விவசாயி அவன். முன்னிரவு. குடிக்கத் தண்ணீர் தேடி அந்த அடுக்குமாடி குடியிருப்புக்குள் நுழைந்தவனை திருடன் என்று துரத்த.. அங்கே அவன் சந்திக்கும் விசித்திர மனிதர்கள்.. அனுபவங்கள்! காலையில் வெளியேறும்போது அவனை யாருமே கண்டு கொள்ளவில்லை. தாகம் தான் இன்னும் தீரவில்லை. ஒரே இரவில் நடக்கும் (ராஜ் கபூர் நடித்த) அந்தப் படம், 'Jakthe Raho,' அப்ளாஸ் வாங்கிய அப்பாஸ் கதை.
புகழ் பெற்ற critic. பிரபல Blitz இதழில் இவர் எழுதிய ‘கடைசி பக்கங்கள்’ காத்திருந்து எல்லோரும் படித்தவை.
3 comments:
நல்ல தகவல்கள். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
நன்றி சார்!
Post a Comment
உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!