அனார்கலியாக நடித்து புகழ்பெற்ற நடிகைகள் உண்டு. மும்தாஜாக நடித்து புகழ் பெற்ற நடிகைகளும். ஆனால் அனார்கலியாகவும் மும்தாஜாகவும் நடித்து புகழ்பெற்ற நடிகை அவர் ஒருவரே. அழகுக்கு ஒரு நடிகை என்று அழைக்கப்பட்டவராயிற்றே?
நடிப்புப் போட்டி ஒன்றில் முதல் பரிசு அள்ளிய போது கூடவே வந்தது கதாநாயகி வாய்ப்பு. அதுவும் பிரபல கிஷோர் ஷாகுவுடன். அடுத்த படம் பிரேம்நாத்துடன். அது அவர்கள் கல்யாணத்தில் முடிந்தது.
வசூலை அள்ளிக் குவித்த 'Anarkali' வந்தது 1953 இல். 'Taj Mahal' வந்தது 1963 -இல். (Incidentally, இதில் சலீமாகவும் அதில் ஷாஜஹானாகவும் நடித்தவரும் பிரதீப் குமாரே.)
தமிழில் வந்த வெற்றிப்படமான 'மாதர்குல மாணிக்கம்' இந்தியில் 'Ghunghat' ஆனபோது அதில் அற்புதமாக நடித்தார். அவார்ட் ஃபில்ம் ஃபேரிலிருந்து! (அழகான கதை: ரயில் விபத்து. அதில் பயணித்த புது திருமண ஜோடி இரண்டில் ஒருத்தி இறந்துவிட, மற்றொருத்தியை தவறுதலாக வீட்டுக்கு அழைத்து வந்து விடுகிறான் அவள் கணவன். வந்துவிட்ட பின்பே இவளுக்குத் தெரிகிறது வரவேண்டிய வீடு அதுவல்ல என்று. வீட்டை விட்டு ஓடுகிறாள்... )
கொஞ்சம் படங்களில்தான் நடித்தார் என்றாலும் இடம் பெற்ற நெஞ்சம் பல.
'அனார்கலி'யின் அந்தப் பாடலை ஆரால் மறக்க முடியும்? "Yeh Zindagi Usi Phi Hai..." அதே போல் 'தாஜ் மஹாலி'ன் "Jo Wadha Kiya Wo.." அந்த ஆண்டின் ஆகப் பெரும் ஹிட்!
No comments:
Post a Comment
உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!