கையில் இருக்கும் மொபைல், காதில் ஒலிக்கும் ரேடியோ, காணும் டி.வி. எல்லாம் சர்வ சாதாரணமாக இருக்கிறது இப்போது நமக்கு. இவற்றுக்கெல்லாம் ஆதார வித்திட்டவர் அதிகம் அறியப்படாமலேயே இருக்கிறார் இன்னும். ஆம், ஒளி மின்சாரம் காந்தம் மூன்றுக்கும் இடையே ஒரு தொடர்பு இருக்கிறது என்று முதன் முதலில் அறிவித்த வித்தகர்…
அறிவியலில் முதல் மூவர் வரிசையில் ஐன்ஸ்டீன், நியூட்டனை அறிவீர்கள். மூன்றாமவர்…
முதல் வண்ணப் புகைப்படத்தை வழங்கியவர்...
James Clerk Maxwell... இன்று பிறந்த நாள்!
‘அறிவியலின் தந்தை’.. ‘
ஒளியின் தந்தை’… எடை போட்டவர்களின் அடை மொழிகள்!
ஒளியின் தந்தை’… எடை போட்டவர்களின் அடை மொழிகள்!
மின்காந்த வீச்சு என்ற இயற்கையின் மாபெரும் பெட்டகத்தை திறந்து வைத்தார் இவர். ரேடியோ அலைகளில் தொடங்கி எத்தனையோ அலைகள் அதிலிருந்து எழுந்தன. அந்த எலக்ட்ரோ மேக்னடிஸம் தியரி. அதன் சமன்பாடுகளை வைத்துத்தான் ஐன்ஸ்டீன் தன் ஸ்பெஷல் தியரி அஃப் ரிலேட்டிவிட்டியைக் கண்டுபிடித்தார்.
‘இவருடன் தொடங்கியது அறிவியலின் புதிய சகாப்தம்,’ என்றார் ஐன்ஸ்டீன், ‘நியூட்டன் காலத்துக்கு பிறகு அறிவியலில் நேர்ந்த மிகச் சிறப்பான மிகப் பிரயோஜனமான கண்டுபிடிப்புகள் இவருடவையே.’
ஆராய்ந்து சொன்ன மற்றொன்று, சனியைச் சுற்றியுள்ள வட்டங்கள் துகள்களே என்பது.
இந்த விஞ்ஞானிக்குள் ஒரு கவிஞரும் இருக்கிறார். சாம்பிளுக்கு 'மனைவிக்கு' என்ற ஒரு கவிதையின் தொடக்கம்:
‘இந்தத் தனி அறையிலிருந்து கிளம்பி அடிக்கடி
நிலம் மேலும் நீர் மேலும் பறக்க விரும்புகிறேன்,
இருளைக் கிழித்து துயரைத் துளைத்து
என்னை உன்னுடன் இணைக்க…’
48 வருடங்களே வாழ்ந்த இவர் நாலைந்து வருடங்கள் கூட வாழ்ந்திருந்தால் ஏகப்பட்ட விஞ்ஞானிகளுக்கு வேலை இல்லாமல் இருந்திருக்கும் என்பார்கள்.
2 comments:
சிறப்பான தகவல்கள்.
வெங்கட் நாகராஜ் சார், மகிழ்ச்சி!
Post a Comment
உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!