421.
நாணமா புன்னகையா
எது தூக்கல் உன்
நாணப் புன்னகையில்?
எது தூக்கல் உன்
நாணப் புன்னகையில்?
422
அந்த நாளில்
நின்று விடாதா உலகம்-
நாம் சந்தித்த...?
நின்று விடாதா உலகம்-
நாம் சந்தித்த...?
423
எழில் உட்காருகிறது
நடக்கிறது, சிரிக்கிறது,
சோம்பல் முறிக்கிறது,
கொஞ்சுகிறது உன்னோடு.
நடக்கிறது, சிரிக்கிறது,
சோம்பல் முறிக்கிறது,
கொஞ்சுகிறது உன்னோடு.
424.
வெறுமேதான் பார்க்கிறாய்
விடை தேடுகிறேன் அதற்கும்.
விடை தேடுகிறேன் அதற்கும்.
425
பார்ப்பது நீ எங்கோ.
தைப்பதுவோ இங்கே.
தைப்பதுவோ இங்கே.
426.
வாசலில் நீ இடும் கோலத்தில்
வைத்திருப்பாய் இன்னும் ஒரு புள்ளி
எனக்காக.
வைத்திருப்பாய் இன்னும் ஒரு புள்ளி
எனக்காக.
427.
என் விதியுடன் கைகுலுக்கினாள்,
விடை பெற்றுக்கொண்டது விதி.
விடை பெற்றுக்கொண்டது விதி.
428
அழகின் தடம்
உன் மனத்திடம்.
உன் மனத்திடம்.
429.
மனைக் கோலம் நீ இட்டது .
அத்தனை அழகாக உன்
மனக்கோலம் நான் இட்டேனா?
அத்தனை அழகாக உன்
மனக்கோலம் நான் இட்டேனா?
430.
பார்க்கிறாய், அழகு.
பேசுகிறாய், அழகு.
சும்மா இருக்கிறாய், அழகு.
பேசுகிறாய், அழகு.
சும்மா இருக்கிறாய், அழகு.
><><><

4 comments:
அருமை
அட..அட..சும்மா இருக்கிறாய்..அழகு
குறும்பா நூல் விரைவில் வெளியிட வேண்டுகிறேன்..
அருமையாக இருக்கு எல்லாமே! ரசித்தோம்
அருமையான ஹைக்கூப்போல கவிதைகள்!
Post a Comment