72
யாரெல்லாமோ வந்து
கேட்கிறார்கள்
’என்ன ஆச்சு உனக்கு?’
கடைசியில் என் ’அவளை’
சந்தித்துவிட்டேன் என்று
சொல்லிவிடவா?
73
அன்பு வளையங்கள் கோர்த்த
அந்த மாலை
எத்தனை அழகு
உன் இதயத்துக்கு.
74.
பளிச்சென்ற உன்
பார்வையில் கூசி
பிரகாசித்துக் கொண்டிருந்த
மின்விளக்கு அணைந்துவிட்டது.
இருட்டு இன்னும்
காணாமல் போனது.
75
என்னையும் உன்னையும் சேர்த்து
அதிலிருந்து
என்னையும் உன்னையும்
கழித்தால்
எஞ்சுவதே நேசம்.
76
சிரிப்பாணியா வருதில்ல உனக்கு
சிரிப்பாணியா வருதில்ல உனக்கு
சில சமயம் என்னை
நினைக்கும்போது?
அதுதான் நீ
அதுதான் நான்.
77.
ரோஜாவின் இதழ்களினூடே
தேடி ஏமாந்தேன்
உன் அதரங்கள் போன்ற
மென்மையை.
78
அத்தனை துளிகளும்
உன்மேல்தான் விழுவேனென்று
அடம் பிடித்ததால்
அருவியாகிவிட்டது
மழை.
<><><>
(படம் - நன்றி; கூகிள்)
6 comments:
ஏழும் அருமை.
அற்புதம்
மிகக் குறிப்பாக அருவி தோன்றும் விதம்
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
பார்வையின் பிரகாசத்தில் மின் விளக்கு அணைவதும் இருட்டு காணாமல் போவதும் மிக அழகு!
அருமை நண்பரே
தம 2
படமே தேவையில்லையே. கவிதையே படமாக மனதில் பதியும்படி உள்ளதே. நன்றி.
//என்னையும் உன்னையும் சேர்த்து அதிலிருந்து என்னையும் உன்னையும் கழித்தால் எஞ்சுவதே நேசம்.//
நேசம் மிக்க வரிகள் ! :)
Post a Comment
உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!