Wednesday, November 5, 2014

வெற்றிகரமான விளக்கம்...

அன்புடன் ஒரு நிமிடம் - 68

“என்ன முயன்றாலும் புரிஞ்சுக்கவே முடியலே… ஒரு வார்த்தை. அதற்குள் அடுத்தடுத்து வரும் ஒரே எழுத்துக்கு உச்சரிப்பு மட்டும் இரண்டு விதமா இருக்கு!” அலுத்துக்கொண்டான் பரசு.

“ஓஹோ?” என்றார் வாசு.

“ஆனால் டாட், அந்த வார்த்தையிலேயே அடுத்தடுத்து வரும் இன்னொரு எழுத்து! அதுவோ ஒரே உச்சரிப்பில் வருது.”

“அதென்ன வார்த்தையோ?”

“ரெண்டு நிமிஷம் தர்றேன், நீங்களே கண்டுபிடியுங்க!”

இரண்டாவது நிமிஷம்….

“Failure!” என்றார் வாசு, ”நீயே சொல்.”

“Success!” என்றான் அவன். “பாருங்க அதில வர்ற அந்த C யை! முதல் C வருதே அது க் என்கிற மாதிரி வருது. அடுத்த  C-யோ, ஸ் என்கிற உச்சரிப்பில்! வேடிக்கையா இல்லை?”

“இல்லை!” என்றார், “ஆச்சரியமா இருக்கு. In fact, அர்த்தமுள்ளதா படுது.

“எப்படி? எப்படி?” பரசு முகத்தில் ஆவல்.

“வெற்றிக்கான வார்த்தை அல்லவா அது?அதனாலேயோ என்னவோ வெற்றிக்கான ஓர் வழி அப்படி அதிலே அமைஞ்சிருக்கு. அடுத்தடுத்து வந்தாலும் C- யின் உச்சரிப்பு மாறுபடுது. அதாவது எப்ப நம்மை மாத்திக்கணுமோ அப்ப நம்மை நாம் மாத்திக்கணும், அப்பதான் வெற்றியடைய முடியும்.”

“அட, விளக்கம் வெகு ஜோர்!” கை தட்டினான் பரசு. “ஆனால் அதே வார்த்தையில் வர்ற S என்கிறஎழுத்தைப் பாருங்க. அடுத்தடுத்து வந்தாலும் ஒரே உச்சரிப்பு தானே அதற்கு?”

“யோசிச்சுப்பார். அதுவும் வெற்றிக்கான இன்னொரு வழியைத்தானே சொல்லுது? எப்ப ஒன்றிச் செயல் படணுமோ அப்ப ஒன்றிச் செயல்படணும் என்கிற பாடத்தை!”

”Successful விளக்கம்தான்!”

(”அமுதம்’ பெப்ரவரி 2014 இதழில் வெளியானது.)

(படம்- நன்றி: கூகிள்.)

11 comments:

ராமலக்ஷ்மி said...

”Successful விளக்கம்!”

அருமை.

வை.கோபாலகிருஷ்ணன் said...

”Successful விளக்கம்தான்!”

//(”அமுதம்’ பெப்ரவரி 2014 இதழில் வெளியானது.)//

பாராட்டுகள். வாழ்த்துகள்.

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
ஐயா

தெளிவான கருத்து அருமையாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

நல்லதொரு செய்தியைத் தெரிந்து கொண்டோம்!

Rekha raghavan said...

ஒரு வார்த்தையில் இவ்வளவு விஷயங்கள் இருக்கா? அருமையான விளக்கம்.ரேகா ராகவன் 

திண்டுக்கல் தனபாலன் said...

விளக்கம் வெகு ஜோர்...!

Yarlpavanan said...

சிறந்த வழிகாட்டல்
தொடருங்கள்

வெங்கட் நாகராஜ் said...

ஒரு வார்த்தையில் வாழ்க்கத் தத்துவம்... அருமை ஜனா சார்.

ஷைலஜா said...

மனதில் பதிகிற மாதிரி விளக்கம் வெற்றி இதுதானே ! வாழ்த்துகள் ஜனா!

Yaathoramani.blogspot.com said...

வித்தியாசமான அருமையான விளக்கம்
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

Ranjani Narayanan said...

வெற்றிக்கு வேண்டிய வழிகளை வெற்றி என்ற வார்த்தையின் உச்சரிப்பு மூலமே விளக்கியது அருமை ஜனா ஸார்!
பாராட்டுக்கள்!

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!