Thursday, August 7, 2014

தொலையாத நாட்கள்...



தொலையாத நாட்கள்...

சூட்கேஸை உருட்டிக்கொண்டே தன் பேத்தி 
ரயில்வே ஸ்டேஷனில் முன் செல்லும்போதும்
திரளான ஸ்டேடியத்தில் இதோ நம்ம சீட் என்றவள்
தானே மற்றவர்களுக்குக் காட்டிக் கொடுக்கையிலும்
விரலை அரை அங்குலம் தேய்த்து ஜி.பி.எஸ்ஸை
சொடுக்கி காரை லெஃப்டில் விட சொல்லுகையிலும் 
அதே வயதில் திருவிழா கூட்டத்தில் 
தான் தொலைந்து போய் ஏற்படுத்திய பரபரப்பை 
நினைத்து வெட்கமும் பெருமையும் உறுகிறாள் இவள்.
><>< 

வலிக்காத நாட்கள்... 

பென்ஜே கிரீம் தடவி விடவா என்று கேட்கிற மனைவியிடமோ
தினம் இப்படி படுத்துதே முதுகு வலி
திருவனந்தபுரம் ஒரு நடை போய் வாருங்களேன்
என்று சொல்லும் நண்பரிடமோ
சுடுதண்ணி வெச்சு ஒத்தடம் கொடுத்தால் கேட்குமென
பரிந்துரைக்கும் பக்கத்து வீட்டு மாமியிடமோ
எப்படி சொல்லுவார் அவர்
சென்னையிலிருந்து பேரப்பயல் வந்து மேலே படுத்துப் புரண்டால்
அடுத்த நிமிடமே காணாமல் போய்விடும்
அத்தனை வலியும் என்று?
><><

(படம் - நன்றி: கூகிள்)

7 comments:

Unknown said...

முதுகு வழிக்கு அற்புத மருந்து !
த ம 1

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
ஐயா.

நன்றாக சொல்லியுள்ளீர்கள் பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

கரந்தை ஜெயக்குமார் said...

மதுகு வலிக்கு அருமையான மருந்து நண்பரே

கோமதி அரசு said...

சென்னையிலிருந்து பேரப்பயல் வந்து மேலே படுத்துப் புரண்டால்
அடுத்த நிமிடமே காணாமல் போய்விடும்
அத்தனை வலியும் என்று?//

உண்மை.
அருமையான கவிதை.

தேன்மதுரத்தமிழ் கிரேஸ் said...

இரண்டும் அருமை

”தளிர் சுரேஷ்” said...

பேரப்பிள்ளைகளின் பாசப்பிணைப்பில் மறந்துவிடும் வலி! உண்மைதான்! அருமை!

இராஜராஜேஸ்வரி said...

தொலையாத நாட்கள் -
மலரும் நினைவுகளாய் மகிழ்ச்சிப்படுத்துகின்றன..

எதிர்பார்க்கும் பேரக்குழந்தை மனதை மலரச்செய்கிறது..

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!