Wednesday, August 27, 2014

காற்றின் திசைக்கு...

அன்புடன் ஒரு நிமிடம் - 63

அவர்கள் பேசிக் கொண்டிருந்த  விஷயம் அப்படியொன்றும் தலையைப் பிய்க்கிற பிரசினை இல்லை. என்றாலும் வாசு எழுந்து குறுக்கும் நெடுக்குமாக நடக்க ஆரம்பித்தது வந்திருந்த அவர் மைத்துனர் பாஸ்கருக்கு ஆச்சரியம்... தவிர எந்த தலைபோகிற சங்கதியானாலும் லேசில் பதற்றம் அடைகிறவர் அல்லவே அவர்?
ஆபீஸ் விஷயமாக அந்தப் பகுதிக்கு வந்திருந்த பாஸ்கர் அப்படியே அவரையும் பார்த்து சில வீட்டுப் பிரசினைகளை கேட்டுவிட்டுப் போகலாம் என்று நுழைந்தான்.
சற்றே கவனித்தபோது சுவரில் மாட்டியிருந்த மின் விசிறியின் சுழற்சிக் கேற்றபடி இடமும் வலமுமாக அவர் நடப்பது புரிந்தது.
காற்றுக்காகத்தான் அப்படி என்றால் ஏன் கஷ்டப்பட்டு அப்படி நடக்கணும்? அதை ஒரே திசையில் வீசச் செய்ய ஓர் ஸ்விட்ச் இருக்கும்போது? , அது வேலை செய்யவில்லை போலும்... இதைக்கூட சரி செய்யாமல் என்ன வீட்டைப் பராமரிக்கிறார் இவர்?
பேச்சு ஒரு முடிவுக்கு வந்ததும் சொன்னான். "எனக்கு இன்னும் அரை மணி போல அவகாசம் இருக்கு. இந்த ஸ்விட்ச்சை சரி பண்ணிடறேனே?"
"அது ரிப்பேர்னு யார் உனக்குச் சொன்னது?"
"ஐயோ அது சரியா வேலை செய்யாததால் தானே நீங்க இப்படி குறுக்கும் நெடுக்குமா...?"
"அப்படீன்னு நீயா  நினைத்துக் கொண்டாய், அவ்வளவுதான!"  என்றவர் அதை ஓரிடத்தில் வீசுமாறு நிறுத்தினார்.
"Oh,it works! அப்புறம் ஏன்  நாம இருக்கிற திசைக்கு அதை ஃபிக்ஸ் பண்ணாமல் ...?"
"அப்படி எதையுமே  நமக்காக மாற்றிப் பழகக் கூடாது என்பதால் தான்! எதனுடைய, யாருடைய பொசிஷனையும்! எப்பவுமே நாம நினைக்கிறபடி விஷயங்கள் நடப்பதற்காக மற்றவங்களை நாம நினைக்கிற நிலைக்கு கொண்டு வர முயற்சிக்கிறோம். அதில் நமக்கு வெற்றிக் களிப்பு ஏற்படற அளவுக்கு விரக்தியும் ஏமாற்றமும் சோர்வும் வர சான்ஸ் இருக்கு இல்லையா?  தேவையான இடங்களில் மற்றவர்களின் நிலைக்குத் தகுந்தாற்போல நம்மை அசைக்க கற்றுக் கொள்வது மிக மிக முக்கியம் மட்டுமல்ல, வெற்றி பெறும் சந்தர்ப்பங்களையும் அதிகரிக்க வைக்கும். ஆக அதை எனக்கு நானே நினைவூட்டிக் கொள்ளத்தான் இதைப்போன்ற சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தி ஒரு பயிற்சியாக எடுத்துக் கொள்கிறேன்அது தக்க தருணத்தில் என்னைச் சுற்றியுள்ளவர்களிடம் நான் வளைந்து கொடுக்க உதவும்."
(’அமுதம்’  2014 ஜனவரி இதழில் வெளியானது)

(படம் - நன்றி: கூகிள்)
><><><><

6 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

//எப்பவுமே நாம நினைக்கிறபடி விஷயங்கள் நடப்பதற்காக மற்றவங்களை நாம நினைக்கிற நிலைக்கு கொண்டு வர முயற்சிக்கிறோம். அதில் நமக்கு வெற்றிக் களிப்பு ஏற்படற அளவுக்கு விரக்தியும் ஏமாற்றமும் சோர்வும் வர சான்ஸ் இருக்கு இல்லையா? //

நிச்சயமாக இருக்குது.

ஆக்கமும் அதில் உள்ள ஆழ்ந்த கருத்தும் அருமை.

அமுதம் வெளியீட்டுக்குப் பாராட்டுக்கள்.

தேன்மதுரத்தமிழ் கிரேஸ் said...

மிக அருமையான பாடம் ...வாழ்த்துக்கள் ஜனா!

ரிஷபன் said...

எப்பவுமே நாம நினைக்கிறபடி விஷயங்கள் நடப்பதற்காக மற்றவங்களை நாம நினைக்கிற நிலைக்கு கொண்டு வர முயற்சிக்கிறோம். அதில் நமக்கு வெற்றிக் களிப்பு ஏற்படற அளவுக்கு விரக்தியும் ஏமாற்றமும் சோர்வும் வர சான்ஸ் இருக்கு இல்லையா? // அருமையான பாடம் !

ராமலக்ஷ்மி said...

/மற்றவர்களின் நிலைக்குத் தகுந்தாற்போல நம்மை அசைக்க கற்றுக் கொள்வது/ அவசியமான ஒன்றே. நல்லதொரு வாழ்க்கைத் தத்துவத்தை அழகாகச் சொல்லியுள்ளீர்கள்.

கரந்தை ஜெயக்குமார் said...

நல்லதொரு பாடம் நண்பரே
நன்றி

கரந்தை ஜெயக்குமார் said...

தம 2

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!