Sunday, August 17, 2014

நல்லதாய் நாலு வார்த்தை... 35


நல்அறிவுரையை விட 
நல்லதோர் அச்சம்
நன் மதிப்பு வாய்ந்தது 
ஓர் மனிதனுக்கு.’
- E.W.Howe
(‘A good scare is worth more to a man 
than good advice.’)
<> 

பட்டங்கள் உயர எழுவது
காற்றை எதிர்த்து நின்று;
காற்றோடு சென்றல்ல.’
- Winston Churchill
(‘Kites rise highest against the wind, 
not with it.’)
<> 

அனுபவம் என்பது 
நமக்கு என்ன நடக்கிறது 
என்பதல்ல. 
நமக்கு நடப்பதை வைத்து
நாம் என்ன செய்கிறோம் 
என்பதே.’
- Aldous Huxley
(‘Experience is not what happens to you; it’s 
what you do with what happens to you.’)
<> 

விவேகமாய் அதை உபயோகிப்பவருக்கு,
விரிந்து கொடுக்கிறது நேரம்.’
- Leonardo da Vinci
(‘Time stays long enough for anyone 
who will use it.’)
<> 

வானத்தின் இடைவெட்டு ஒன்றை 
வாழ்க்கைக்கு மேலாக எப்போதும்
வைத்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள்!'
- Marcel Proust
('Always try to keep a patch of sky above your life.')
<> 

சின்ன வயதில் நாம் 
சிரமங்களின் மீது பாய்கிறோம்.
வயதான காலத்தில் 
சிரமங்கள் நம் மீது 
பாய்கின்றன.’
- Josh Billings
(‘In youth we run into difficulties. 
In old age difficulties run into us.)
<>

தடைகளே இல்லாத பாதையை 
கண்டுபிடிக்கக் கூடுமானால்
அனேகமாக அது நம்மை 
எங்கேயும் கொண்டுபோய்ச் சேர்க்காது.’
- Frank Clark
(‘If you can find a path with no obstacles, 
it probably doesn’t lead anywhere.’)


<<<>>> 

(படம்- நன்றி : கூகிள்)

7 comments:

தி.தமிழ் இளங்கோ said...

அருமையான சிந்தனை மணிகள்! பகிர்வுக்கு நன்றி!
த.ம.2

ராமலக்ஷ்மி said...

அருமையான பொன்மொழிகள். 3,4,7 மிகப் பிடித்தன. பகிர்வுக்கு நன்றி.

வை.கோபாலகிருஷ்ணன் said...

அனைத்தும் அருமை. பகிர்வுக்கு நன்றிகள்.

கரந்தை ஜெயக்குமார் said...

//தடைகளே இல்லாத பாதையை
கண்டுபிடிக்கக் கூடுமானால்
அனேகமாக அது நம்மை
எங்கேயும் கொண்டுபோய்ச் சேர்க்காது.’//
அருமை அருமை நண்பரே
நன்றி

கரந்தை ஜெயக்குமார் said...

தம 3

இராஜராஜேஸ்வரி said...

நல்லதோர் அச்சம்
நன் மதிப்பு வாய்ந்தது

நல்ல அறிவுரை..!

இராஜராஜேஸ்வரி said...

’தடைகளே இல்லாத பாதையை
கண்டுபிடிக்கக் கூடுமானால்
அனேகமாக அது நம்மை
எங்கேயும் கொண்டுபோய்ச் சேர்க்காது/

உராய்வு இல்லாவிட்டால் நடையே இருக்காதே..
பாதை எங்கிருந்து வரும்?!

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!