Sunday, July 5, 2026

இருவரில் ஒருவர்…


1. ஏராளமான பேர் ஒரே நேரத்தில் ரசிக்கிற கேளிக்கையாக இருக்கிறது.
2. மாபெரும் கூடாரத்தில் எண்ணற்ற பிராணிகளின் பங்கேற்புடன் அமைந்திருக்கிறது
3. குடும்பத்துடன் அமர்ந்து பார்க்கும்படியாக,
4. எல்லா வயதினருக்கும் பொருத்தமான ஒரு நிகழ்ச்சியாக இருக்கிறது.
இந்த நான்கையும் ஏற்படுத்தி சர்க்கஸ் என்பதை ஓர் மாபெரும் கேளிக்கையாக மாற்றி அமைத்த இருவரில் ஒருவர்…
James Anthony Bailey. இன்று பிறந்தநாள்!
மிச்சிகனில் பிறந்த இவர் பிச்சு உதறினார் சர்க்கஸ் சார்ந்த சகல விஷயத்திலும்! இரண்டு வயதில் தந்தையையும் எட்டு வயதில் தாயையும் இழந்தவர்.
சர்க்கஸ் கம்பெனி நடத்திக் கொண்டிருந்த P T Barnum, அதாங்க அந்த இன்னொருவர், அவருடன் தன்னை இணைத்துக் கொண்டார். உலக முழுதும் சர்குலேட் ஆனது அவர்கள் சர்க்கஸ். (ஹாலிவுட் படம்கூட வந்ததே, ‘The Greatest Show on Earth’)
அருமையான ஜோடி இருவரும். சர்க்கஸை பிரபலப்படுத்திக் கொள்ளுவதில் நிபுணர் பார்னம். பின்னால் இருந்து சர்க்கஸை வெற்றி பெற வைப்பது பின்னவருக்கு பிடித்தமானது. ‘என்னை விட பத்து மடங்கு திறமைசாலி,’ என்று அவரே சொன்னார் இவரை.
வருடத்தில் ஒரு நாளை தாய் தந்தையற்றவர் தினம் என்று அறிவித்து அன்று அவர்களுக்கு மட்டும் ஷோ நடத்துவார்.
அத்தனை பெரிய கூடாரத்தையும் வேலையாட்களையும் கலைஞர்களையும் பிராணிகளையும் ஒவ்வொரு ஊருக்கும் கொண்டு செல்வதற்கு அவர் அமைத்திருந்த அட்டகாசமான சிஸ்டம் பாராட்டப்பட்டதோடு, பின்பற்றவும் செய்யப்பட்டது சில இடங்களில்.
அவர் மனக்கூடாரத்தில் உதித்த முத்து:
‘கலை என்பது மனிதனின் இயற்கை. இயற்கை என்பது கடவுளின் கலை. எளிமை என்பது இயற்கையின் முதல் படி, கலையின் கடைசிப் படி. உலகின் ஒரே சமநிலை மரணம் மட்டுமே. ஒவ்வொரு மனிதனும் தன்னை கடவுளின் ஓர் செயலாக, தன்மனதை கடவுளின் ஒரு எண்ணமாக, தன்னுடைய வாழ்க்கையை கடவுளின் ஒரு மூச்சாக நினைக்கட்டும்! தன் நற்செயல்களாலும் நல்லெண்ணங்களாலும் தன்னுள்ளே இருக்கும் சொர்க்கத்தை திறந்து காட்ட முயலட்டும்!’
இன்னும்...
‘உலகை முன்னேற்றுவதற்கு உள்ளதிலேயே மிக மோசமான வழி அதைக் குற்றம் சொல்வது.’
‘கடவுளை நோக்கி அழைத்துச் செல்லாத எந்த எண்ணத்திலும் நான் காலை வைக்க மாட்டேன்.’
‘நிறைய சிந்திக்கிறவன், உயர்ந்ததையே உணர்கிறவன், மிகச் சிறந்ததையே செய்கிறவன்.. அவன் தான் அதிகம் வாழ்கிறான்.’

No comments:

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!