'பாலூற்றி உழவு செய்வார்...' என்று ஆரம்பிக்கிறது அந்தப் பாடல்.
தென்பாண்டி சீமையின் வளத்தை எத்தனை அழகாக...
அடுத்த வரிதான் அற்புதம்!
'பனிபோல் விதை நடுவார்..' என்னவொரு கற்பனை! இதைவிட சிறப்பா சொல்லமுடியுமா?
முதல் தடவை கேட்கிறப்ப ஒரு உற்சாகம் பிறக்கும். ரெண்டாம் முறை ஆஹான்னு.. மூணாவது எழுந்து ஆடத் தோணும்.. அப்படி ஒரு இசை!
படம்: பாகப் பிரிவினை
பாடல்: "தேரோடும் வைகை.. சீரான மதுரையிலே
ஊரார்கள் கொண்டாடும்.. ஒயிலாட்டம்!"
முன்னே சிவாஜியும் சரோஜா தேவியும்..
பின்னே பீம்சிங்கும்விஸ்வநாதன் ராமமூர்த்தியும் மருதகாசியும்!
பீம்சிங் படம் என்றால் தவறாமல் அதில் ஒரு கோஷ்டி நடனம் இடம் பெறும். (தீர்க்கதரிசி. இப்ப அது இடம் பெறாத படமே இல்லை.)
எந்த ஷாட்டை எடுத்துப் பார்த்தாலும் சிவாஜியின் நடன அசைவுகள் படு கச்சிதமாக பாத்திரத்தின் இயலாமையுடன் பொருந்திப்போகும்.
தேரோடும் ... எனும்போது பின்னால் சீறிப்பாயும் அந்த இசை!
சரணத்தில் வெள்ளந்தியாக எழுப்பும் வினாவும் சுள்ளென்று வந்து விழும் விடையும்…
'சித்திரை மாதம் முத்துக்கள் வித்து
திரும்பி இங்கே வருவதென்றே
சென்றவர் இன்னமும் வந்தில சேதி
தெரிந்து சொல்லடி ராமாயம்மா..'
என்று அவன் கேட்க,
'வித்த இடத்தில பத்தினிப் பொண்ணும்
விரித்த வலையில் விழுந்து விட்டார்
உன்னையும் என்னையும் மறந்து விட்டார்
உண்மையைச் சொல்லடி ராமாயம்மா...'
என்று அவள் பதில் சொல்ல..
இந்தப் பாடலின் பாணியில் வந்த ‘Jis Desh Mein Ganga Behti Hai’ படப் பாடலில் ('Hum bhi hain Tum bhi ho..) சங்கர் ஜெய்கிஷன், அவர்கள் ஸ்டைலில் பிச்சி உதறியிருப்பாங்க.
><><
4 comments:
அந்தக்காலத்து மிக அருமையான பாடல். பகிர்வுக்கு நன்றி.
எனக்கும் பிடித்த பாடல். சிறு வயதில் எங்கள் எதிர்வீட்டில் கிராமபோன் வைத்து இருந்த மாமா இந்த பாடலை நல்ல சத்தமாக வைத்து கேட்பார்.
இந்த படத்தில் எல்லா பாடலும் மிகவும் பிடிக்கும்.
மந்தரையின் போதனையால் மனம் மாறி கைகேகி அந்த பாடலும் மிகவும் பிடிக்கும்.
உங்கள் வரிகளில் கூடுதலாய் ரசனை.
அருமையான பாடல்...
Post a Comment
உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!