529
திரும்பிப் பார்த்தாய்,
'என்'னைக் காணோம்!
530
சொல்லவே மாட்டேன் உன்னிடம்:
'மாத்தி யோசி.'
531
அன்பின் நுணுக்கங்கள்
அவள்போல் ஆரறிவார்?
532
உன்னை வர்ணிக்கையில்
சிலிர்த்தன சொற்கள்!
533
சொல்லவும் தெரியவில்லை
சொல்லாதிருக்கவும் முடியவில்லை
வார்த்தையில்
நில்லாத உன் அன்பை.
534
உன் முகம்
என் நூல்.
535
நின்று மீள்கிற
நாநோ செகண்டில் உன் பார்வை
கொன்று துடிக்கிறது மனசு.
536
மெல்லத் துடிக்கிற இமையும்
விழியசையும் லாவகமும்
உன் கண் ரேகை எனக்கு.
537
காலை மலர்களை ரசிக்க வந்தால்
அவை உன்னைத் தேடிக் கொண்டிருந்தன
தங்களை ஒப்பிட.
538
மணம் வைத்தறியும் மலர் போல
மனம் வைத்தறிந்தேன் உன்னை.
><><><
2 comments:
அனைத்தும் அருமை. என்னைக் கவர்ந்தவை : 533 & 537
மலர்களைவிட மங்கை அழகோ! இருக்கலாம். இருக்கலாம்.
’பூக்களைவிட அந்த பூக்காரி நல்ல அழகு’ என என் சிறுகதை ஒன்றில் ஆரம்ப வரிகளாக அமைத்திருந்தேன். அதுவும் நினைவுக்கு வந்து புன்னகைத்தேன்.
http://gopu1949.blogspot.com/2014/05/vgk-16.html
அனைத்தும் சிறப்பு.
Post a Comment
உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!