Thursday, April 10, 2014

நம்பிக்கை...


 
 
காலம் என்னைக்
கரை சேர்க்கும், என்
கவலைகளுக்கு
இதம் வார்க்கும்.
 
எதுவும் மறக்கும்.
எங்கோ ஓர் வழி திறக்கும்.
நாளை பூக்கும் பூவில்
நல்ல வாசம் இருக்கும்.
 
தென்றல் என்னைத்
தேடிவரும் அதன்
தருணம் வரும்போது.
செய்ய வேண்டுவதெல்லாம் நான்
நம்பிக்கையுடன் காத்திருப்பதே.
 
நான் எப்போதுமே
நான் நினைக்கும்
நான் இல்லை.
இனிய நான்.
இரண்டெழுத்துக் கவிதை நான்.
எளிய நண்பன் என்றும் எனக்கு
நானே நான்.
<<<>>>

(படம்- நன்றி: கூகிள்)

7 comments:

ராமலக்ஷ்மி said...

/இரண்டெழுத்துக் கவிதை நான்./

உற்ற நண்பனுமாக.. அருமை!

வை.கோபாலகிருஷ்ணன் said...

தும்பிக்கை போன்ற நம்பிக்கையளிக்கும் படமும் ஆக்கமும் அருமை.

இதையும் நான் நினைக்கும் ’நான்’ சொல்லவில்லை.

ஏதோ இன்று சொல்லணும்போலத் தோன்றியது ...... எளிய நண்பனாக நானே நான் என்று.

மனோ சாமிநாதன் said...

//நாளை பூக்கும் பூவில்
நல்ல வாசம் இருக்கும்.//
அருமையான வரிகள்! நம்பிக்கைதானே வாழ்க்கை! துன்பங்கள் சூறாவளியாய் தொடர்ந்து தாக்கும்போது, இந்த மாதிரி நம்பிக்கை தான் தென்றல் மாதிரி மனதை இதமாய் தடவுகிறது!

திண்டுக்கல் தனபாலன் said...

நமக்கு நாமே நண்பன் இனிமை...

இராஜராஜேஸ்வரி said...

இனிய நான்.
இரண்டெழுத்துக் கவிதை நான்.
எளிய நண்பன் என்றும் எனக்கு
நானே நான்.

தும்பிக்கை கொண்ட யானைபோல்
நம்பிக்கை கொண்ட நான் தோற்பதில்லை..

தேன்மதுரத்தமிழ் கிரேஸ் said...

//நாளை பூக்கும் பூவில்..// சிறந்த நம்பிக்கை வரிகள்!
நானே எனக்கு நண்பன்....அழகான கருத்து

வெங்கட் நாகராஜ் said...

எனக்கு நானே நண்பன்....

அருமை..

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!