Monday, April 7, 2014

அணுகு முறை...

ண்பர் சேது வீட்டில் நான் நுழைந்த போது அவர் தன் பையனை வார்த்தைகளால் துவைத்துக் கொண்டிருந்தார். போன வருஷம் வாங்கிய ஐந்தாம் ராங்கை விட்டு இப்ப எட்டுக்கு வந்துட்டானாம்.
''வாத்தியார் என்ன சொன்னார்? பையன் ரொம்ப ஸ்லோன்னு சொன்னாரா?'' என்று கேட்டேன்.
''இல்லை.''
''அப்ப ஐன்ஸ்டீன் மாதிரி எல்லாம் வரமாட்டான்.''
''பையன் கணக்குல புலி.''
''அப்ப ஒரு பெஞ்சமின் ஃபிராங்லின் ஆகவும் முடியாது. ஏன்னா அவர் கணக்குல வெரி புவர்! ஸ்பெல்லிங் மிஸ்டேக்ஸ் நிறைய வருதா?''
''வரவே வராது.''
''சே, பெர்னார்ட்ஷா ஆகிறதுக்கும் சான்ஸ் இல்லே! கிளாசில் அடி மட்டத்துக்குப் போயிருந்தானா?''
''நெவர்.''
''போச்சு. எடிசன் ஆகிற வாய்ப்பும் இல்லே. சரி, அடிக்கடி ரொம்ப டல்லா இருப்பானா?''
''அப்படி நான் பார்த்ததே இல்லே.''
''அப்ப ஜேம்ஸ் வாட் மாதிரியும் வரமாட்டான் போல... ஒகே. உங்க கவலை நியாயமானது தான். இத்தனை பிரபல மனிதர்களின் ஒரு மைனஸ் பாயிண்டும் இல்லையே இவனிடம்?''
கையைப் பிடித்துக் கொண்டார் நண்பர். ''என் கண்ணைத் திறந்தீங்க... டேய் பிரனேஷ், இங்கே வாடா,'' என்றார் மிக மிக அன்பான குரலில், ''சாரிடா!''

(குமுதம் 14-02-2007 இதழில் வெளியான என் ஒருபக்கக் கதை)
 

7 comments:

ராமலக்ஷ்மி said...

நல்ல ‘அணுகு முறை’!

”தளிர் சுரேஷ்” said...

அருமையான அணுகுமுறை! சிறந்த கதை! வாழ்த்துக்கள்!

Yaathoramani.blogspot.com said...

ஆம் நிச்சயமாக
வித்தியாசமான அணுகுமுறைதான்
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

திண்டுக்கல் தனபாலன் said...

அப்பாடா...!

மனோ சாமிநாதன் said...

அருமையான அணுகு முறை! தட்டிக்கொடுத்து குழந்தைகளை வளர்க்க வேண்டிய விதத்தை அழகாய் சொல்லிக்கொடுக்கிறது இந்த அணுகு முறை!!

வெங்கட் நாகராஜ் said...

பாசிட்டிவ் அணுகுமுறை....

பிடித்திருந்தது.

கீதமஞ்சரி said...

மிகச்சரியான அணுகுமுறை... பெற்றோரும் உற்றோரும் குழந்தைகளை அணுகும் முறையில்தான் அவர்களது எதிர்காலம் வடிவம் பெறுகிறது. நல்லதொரு கதைக்கும் அது குமுதம் இதழில் வெளிவந்தமைக்கும் பாராட்டுகள் ஜனா சார்.

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!