Tuesday, April 1, 2014

நல்லதா நாலு வார்த்தை… - 28


 
எல்லாம் முடிந்தது
என்றுணரும்
நேரமொன்று வரும்
எனினும் அதுவே
தொடக்கம்.'
-Louis L'Amour
('There will come a time when you believe everything
is finished. Yet that will be the beginning.')
<> 

'இங்கே நீங்கள் இருப்பதெல்லாம்
ஒரு சிறிய பயணத்துக்காகவே.
கவலை வேண்டாம். அவசரம் வேண்டாம்
மலர்களை வழியில் நுகர
மறக்க வேண்டாம்.'
- Walter Hagen
('You're only here for a short visit. Don't hurry, don't worry.
And be sure to smell the flowers along the way.')
<> 

'முன்பிருக்கும குன்றைப்போல,
பிரசினைகள்,
அதை நோக்கி முன்னேறி செல்ல,
நேராகிறது.'
- Marcelene Cox
('Trouble, like the hill ahead, straightens out
when you advance upon it.')
<> 

'அனுகூலம் எதையும்
அனுபவியாது இருத்தலே
ஆகச் சிறந்த அனுகூலம்.'
- Thoreau
('It is the greatest of all advantages
to enjoy no advantage at all.')
<> 

'காலம் நமக்குச் சொல்லும்
நாம் செய்ததும்
செய்யாததும்.'
- Harvey Fierstein
('Time will tell us what we did
and didn't do.')
<> 

'மனிதனுக்கும் அவன் வாழும்
வாழ்க்கைக்குமான
எளிய இணக்கம் தவிர்த்து
ஆனந்தம் என்பது வேறென்ன?'
- Albert Camus
('But what is happiness except the simple harmony
between a man and the life he leads?')
<> 

'விவேகியான மனிதன்
விரைந்து மன்னிக்கிறான்,
ஏனெனில் அவனறிவான்
நேரத்தின் நிஜ அருமை,
அவசியமற்ற வேதனையில்
அது வீணாகி
அவதியுற மாட்டான்.'
-Samuel Johnson
('A wise man will make haste to forgive,
because he knows the true value of time, and
will not suffer it to pass away in unnecessary pain.')
><><><>< 

(படம்- நன்றி: கூகிள்)

6 comments:

மனோ சாமிநாதன் said...

//'இங்கே நீங்கள் இருப்பதெல்லாம்
ஒரு சிறிய பயணத்துக்காகவே.
கவலை வேண்டாம். அவசரம் வேண்டாம்
மலர்களை வழியில் நுகர
மறக்க வேண்டாம்.'
- Walter Hagen
('You're only here for a short visit. Don't hurry, don't worry.
And be sure to smell the flowers along the way.')//

மிக அழகான வரிகள்!!

திண்டுக்கல் தனபாலன் said...

அனைத்தும் அருமை... பிடித்தவை : காலம் அனுகூலம்

ராமலக்ஷ்மி said...

அருமையான பொன்மொழிகள். சிறப்பான தமிழாக்கம்.

கோமதி அரசு said...

பொன்மொழி மிக அருமை.
காலம் நமக்கு சொல்லும் கவிதை மிக நன்றாக இருக்கிறது.

வெங்கட் நாகராஜ் said...

அனைத்துமே அருமை....

இராஜராஜேஸ்வரி said...

’எல்லாம் முடிந்தது
என்றுணரும்
நேரமொன்று வரும்
எனினும் அதுவே
தொடக்கம்.'

தொடக்கமும் முடிவுமாக என்றும்
தொடரும் கதையே வாழ்க்கை..!

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!