Thursday, November 14, 2013

நல்லதா நாலு வார்த்தை - 22


'உலகம் நாளை

உடைந்து சிதறுமென 

அறிய நேர்ந்தாலும் நடுவேன் என் 

ஆப்பிள் மரத்தை.'

-Martin Luther

('Even if I knew that tomorrow the world would

go to pieces, I would still plant my apple tree.')

<> 

'என்ன செய்ய வேண்டும் அதை 

என்பது மட்டும் தெரிந்தால்  

இந்நேரமே மிக நந்நேரம்!'

- Emerson

('This time is a very good one if we

but know what to do with it.') 

<> 

'பறவைக்கு ஓர் கூடு

சிலந்திக்கு ஓர் வலை

மனிதனுக்கு நட்பு.'

<> 

-William Blake 

('The bird a nest, the spider a web, man friendship.')

<> 

‘கற்றுக் கொள்ளாதவருக்கு 

முதுமை குளிர் காலம்;

கற்றுக் கொண்டவருக்கு 

அது அறுவடைக் காலம்!

- Proverb

('Old age, to the unlearned, is winter;

to the learned, it is harvest time.')

<>

‘அவனிடம் இருப்பதுவோ 

அவன் செய்வதுவோ அல்ல 

ஒரு மனிதனின் மதிப்பை உரைப்பது

அவன் எப்படி இருக்கிறான் என்பதே!’

 - Henri Amiel

('It is not what he has, or even what he does

which expresses the worth of a man, but what he is.') 

<> 

 ‘பாராட்டு என்பது

அதைப் பெறும் தகுதியை 

ஒருவனுக்கு

ஏற்படுத்தும் கருவி.'

-Franklin Jones 

('Praise is a device for making a man deserve it.')

<> 

'நண்பர்கள்

உருவாக்கப் படுவதில்லை 

உணர்ந்து கொள்ளப் படுகிறார்கள்!'

 - Carl Rakosi

('Friends are not made, but recognized.')

 <<<>>> 
 
(படம்- நன்றி: கூகிள்)

 

12 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

அனைத்தும் அருமையாக உள்ளன. பாராட்டுக்கள்.

//‘கற்றுக் கொள்ளாதவருக்கு முதுமை குளிர் காலம்; கற்றுக் கொண்டவருக்கு அது அறுவடைக் காலம்!//

// ‘பாராட்டு என்பது அதைப் பெறும் தகுதியை ஒருவனுக்கு
ஏற்படுத்தும் கருவி.'//

//'பறவைக்கு ஓர் கூடு, சிலந்திக்கு ஓர் வலை, மனிதனுக்கு நட்பு.'//

ஆகிய மூன்றுமே எனக்கு மிகவும் பிடித்துள்ளது.

இராஜராஜேஸ்வரி said...

நம்பிக்கை விதைக்கும்
நல்ல வார்த்தைகள்..பாராட்டுக்கள்..!

”தளிர் சுரேஷ்” said...

அருமையான பொன்மொழிகள்! நன்றி!

தி.தமிழ் இளங்கோ said...

மரம் வளர்ப்பதன் மகத்துவத்தை மார்ட்டின் லூதரின் பொன்மொழி
('Even if I knew that tomorrow the world would go to pieces, I would still plant my apple tree.') உணர்த்துகிறது.
மற்றைய பொன்மொழிகளும் கருத்தாழம் உள்ளவை. தொகுப்பிற்கு நன்றி!

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை
அருமை

தேன்மதுரத்தமிழ் கிரேஸ் said...

அனைத்தும் அருமை! மிகப் பிடித்தது. தேடித் தொகுத்துக் கொடுப்பதற்கு நன்றி!

புதுவை சந்திரஹரி said...

dear K.P.J - poems and story excellent. Best wishes. puduvai chandrahari

ராமலக்ஷ்மி said...

பொன்மொழிகளும் தமிழாக்கமும் மிக அருமை.

நிலாமகள் said...

எங்க வீட்டு அறிவிப்புப் பலகையில் உங்க ஆக்கங்கள் அடிக்கடி இடம் பிடித்து விடுகின்றன. வாழ்த்தும் நன்றியும்.

Kasthuri Rengan said...

ரொம்ப நல்ல கீது சார்...

நிலாமகள் said...

'உலகம் நாளை

உடைந்து சிதறுமென

அறிய நேர்ந்தாலும் நடுவேன் என்

ஆப்பிள் மரத்தை.'

-Martin Luther

('Even if I knew that tomorrow the world would

go to pieces, I would still plant my apple tree.')

சேர்த்துக் கொண்டேன்... நன்றி.

http://nilaamagal.blogspot.in/2013/10/blog-post_29.

வெங்கட் நாகராஜ் said...

அனைத்துமே அருமை.....

முதல் மொழி - என்ன ஒரு நம்பிக்கை! அற்புதம்....

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!