அன்புடன் ஒரு நிமிடம் - 49
“எனக்கு ஒரு விஷயம் புரியவே இல்லே மாமா, சிலருக்கு சில உதவிகள் தேவைப்படுது. அதை செய்யறவங்களோ அல்லது அதை நிறைவேத்தற வழிகளோ அவங்க அருகிலேயே அவெய்லபிலா இருப்பாங்க. ஆனா அந்த உதவிகள் கிடைக்காமலேயே அவங்க கஷ்டப்படறாங்க...”
சிரித்தார் ராகவ்.
இருவரும் விரைந்து கொண்டிருந்த பைக் அதற்குள் அந்த வீட்டை அடைந்தது. காலிங் பெல்லை அழுத்தினார். “ஓ, இதானே உங்க ஒண்ணு விட்ட தம்பி வீடு? ஒண்டிக்கட்டையா தனியே வசிக்கிறார்? என்ன விஷயமா பார்க்க வந்திருக்கோம்?”
“உள்ளே வந்து பாரு.”
வரவேற்ற முருகேசனிடம் வந்த விஷயத்தை... “ஒரு சின்ன விஷயம். உன்னோட உதவி வேணும் முருகேஷ்!”
“செய்யறேன், சொல்லுங்கண்ணா”
“என்னன்னா... அவளுக்கு இப்ப நிறைய நேரம் கிடைக்குது. அதை உருப்படியா உபயோகிக்கலாம்னு ஒரு ஐடியா.”
“ஆமா, நான் கூட சொல்லலாம்னு நினைச்சேன். இப்பல்லாம் வீட்டிலிருந்தே செய்யற மாதிரி நிறைய...”
“கேடரிங் சேர்வீஸ் ஆரம்பிக்கலாம்னு ஒரு ஐடியா.”
“பேஷ்! இப்பத்திய காலத்துக்கு ரொம்ப பொருத்தமான பிஸினஸ். அப்புறம் என்ன யோசனை? ஆரம்பிச்சுட வேண்டியதுதானே?
“ஆமா ஆமா, வேண்டியதுதான்! ஆர்டர் கேன்வாஸ் பண்ண ஆரம்பிச்சுட்டேன். என்ன ஒரு இதுன்னா... அவளோட சமையல் எப்படி, வரவேற்பு எப்படி இருக்கும்னு கொஞ்சம் அஸெஸ் பண்ணிப் பார்க்க வேண்டியிருக்கு. சொல்லப்போனா ஒருபக்கம் அதை தினமும் சாப்பிட்டுப் பார்த்து ஓகே செய்யறது ஒரு முக்கிய அம்சமா படுது. அதை நீ செஞ்சு தந்தால் நல்ல ஹெல்பா இருக்கும்.”
“அப்படியா?”
“ஆமா தினம் பண்ற டிபன், சாப்பாடு எல்லாம் ஒரு செட் அப்படியே உனக்கு வந்துரும். நீ சாப்பிட்டுப் பார்த்து அப்பப்ப ஏதாச்சும் திருத்தம், இம்ப்ரூவ்மெண்ட் தேவைப்பட்டா சொல்லணும்... இப்ப நீ ஹோட்டலிலே தானே சாப்பிடறே? அதுக்குப் பதில் நான் அனுப்பறதை சாப்பிடறே. நிச்சயமா அதைவிட இது உன்னை அதிகம் பாதிச்சுடாது இல்லையா?”
“அதுக்கென்ன சந்தோஷமா செஞ்சுடறேன். கரும்பு தின்னக் கசக்குமா ரக வேலை இது. அப்புறம் எனக்கென்ன பிரசினை? சொல்லப்போனா இது எனக்கும்தான் ஒரு உதவி...”
திரும்பி பைக்கில் வரும்போது கேட்டான். “சொல்லவே இல்லையே மாமா? கேட்டரிங் செர்வீஸா? பலே, நல்ல பிஸினஸ்!”
“ஆரு பண்ணப் போகிறாங்க பிஸினஸ் எல்லாம்? எல்லாம் அளப்பு!”
விழித்தான். “அப்ப அவரிடம் சொன்னதெல்லாம்...”
“வேறே என்ன பண்றது? வருஷக்கணக்கா ஒட்டல்லேயே சாப்பிட்டுட்டு இருக்கான் இவன். ஆனால் பி.பி. சர்க்கரைன்னு நிறைய நோய்களை வெச்சிருக்கிறவன். வயசும் ஆச்சு. எத்தனையோ முறை சொல்லிப் பார்த்தாச்ச்சு எங்களோடவே சாப்பிடுன்னு. கேக்கலே. நாங்க என்ன கேக்கிறது, அவனே உரிமையோடு வந்து சாப்பிடலாம். வறட்டு கௌரவமா, ஈகோவா... ஏதோ ஒண்ணு தடுக்குதுன்னு புரிஞ்சுக்கிட்டோம். அதான் .யோசிச்சு... அதை விரட்டி அடிக்க இப்படி ஒரு ஐடியா...”
“அப்ப அதுக்காக ஒரு பிஸினஸ் நடத்தணுமே? எப்படி?”
“ஏன் நடத்தணும்? அதெல்லாம் அவனுக்கு எங்கே தெரியப்போகுது? அங்கே இங்கே அனுப்பறோம்னு சொல்லிக்குவேன். ரியலி அவனுக்கு மட்டும் தான் இந்த கேடரிங் சர்வீஸ்.”
“புரிஞ்சது.”
“கொஞ்ச முந்தி கேட்ட உன் கேள்விக்கும் விடை கிடைச்சிருக்குமே? சிலருக்கு கடவுள் பக்கத்திலேயே சில அனுகூலங்களை வெச்சிருந்தும் அவங்களோட தேவையற்ற, அபரிமிதமான தன்னுணர்வு குறுக்கே நின்னு அது கிடைக்காம ஆகிவிடுது. சுய விமரிசன சிந்தனை இல்லாத வரைக்கும் அவங்க அதைக் கண்டுகொண்டு தங்கள் வாழ்வை சரிப்படுத்திக்கறதில்லே. என்ன பண்றது, சமயத்தில அந்த விஷயத்துக்கும் சேர்த்து நாமதான் அவங்களுக்கு உதவி செய்ய வேண்டியிருக்கு, இப்ப இவனுக்காக நாங்க இப்படி ஒரு பொய்யான செட் அப் செய்யற மாதிரி.”
('அமுதம்' ஜூலை 2013 இதழில் வெளியானது)
<<<<>>>>
(படம் - நன்றி: கூகிள்)
12 comments:
அட, மிக அருமை ஜனா!
நல்லா இருக்குங்க.
அருமையான கதை! நல்லதொரு பகிர்வு! நன்றி!
அன்பு அருகிருந்தும்... மிகவும் அழகான ஆரோக்யமான கதை. மிகவும் ரஸித்தேன். நல்லாயிருக்கு. பாராட்டுக்கள், வாழ்த்துகள்.
சிலருக்கு சில வீடுகளில் சென்று சாப்பிட கூச்ச சுபாவமாக இருக்கும். அதற்கு இதுபோன்ற ஏற்பாடு நல்ல ஐடியா, தான்.
>>>>>
//('அமுதம்' ஜூலை 2013 இதழில் வெளியானது) //
மனம் நிறைந்த இனிய நல்வாழ்த்துகள்.
அருமையான கதை.
வாழ்த்துக்கள்.
சிலருக்கு கடவுள் பக்கத்திலேயே சில அனுகூலங்களை வெச்சிருந்தும் அவங்களோட தேவையற்ற, அபரிமிதமான தன்னுணர்வு குறுக்கே நின்னு அது கிடைக்காம ஆகிவிடுது.. //சரிதான்.. அவர் பாணியில் தீர்வு கண்டு பிடித்த விதம் அருமை
அவருக்கு எப்படியாவது உதவ வேண்டும் என்ற எண்ணம் பாராட்டுக்குரியது...வாழ்த்துக்கள் நண்பா
ஐடியா நல்லா இருக்குங்க, ஆனா ப்ராக்டிகலி ஒத்துவருமா என (எனக்கு) கொஞ்சம் டவுட்டா இருக்கு! ;) :)
பொய்யான செட் அப் ஆனாலும்
மெய்யான அன்பு ..!
தாமதமா படிச்சாலும் நல்ல கதை படித்த திருப்தி ஜனா
அருமை......
Post a Comment
உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!