வாங்கிய 15 டாலர் கடனைத் தீர்ப்பது எப்படி? நண்பர்களுடன் தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தார் அவர். கையிலிருந்த கம்பியை வளைத்தும் மடக்கியும் ஏதோபண்ணிக்கொண்டு இருந்தவருக்கு சட்டென்று அந்த ஐடியா. அப்படி உருவாகியதுதான் நாம் உபயோகிக்கும் ஊக்கு.
அவர்... Walter Hunt (1796 - 1859) இன்று பிறந்த நாள்.
சேஃப்டி பின் ஐடியாவை பேடன்ட் செய்தவர் அந்த உரிமையை வெறும் 100 டாலருக்கு விற்று விட்டார். எதையாவது கண்டுபிடித்து கொண்டிருப்பதுதான் அவரது வேலை. ஆனால் அதை வைத்து பிழைக்கத் தெரியவில்லை. விட்டு விடுவார் கோட்டை. விற்று விடுவார் பேடன்டை.
குதிரை வண்டிகள் அடிக்கடி விபத்துக்குள்ளாவதைத் தடுக்க கால் பிரேக் கண்டுபிடித்தவர் அதையும் சில டாலர்களுக்கு….
ஆணி தயாரிக்கும் மெஷினிலிருந்து பேப்பர் சட்டை காலர் வரை, ஐஸ் உடைக்கும் படகிலிருந்து பாரஃபின் மெழுகுவர்த்தி வரை இவர் கண்டுபிடித்தவற்றுக்குக் கணக்கில்லை.
தையல் மெஷினுக்கு ஒரு உருப்படியான மாடல் கண்டுபிடித்தவர், கையால் தைப்பவர்கள் வேலை போய்விடுமே என்று அதை பதிவு செய்யாமல் இருந்தார். பிற்பாடு வேறு யாரோ ஒரு மாடலைக் கண்டுபிடித்துவிட தன் உரிமைக்காக வாழ்நாள் முழுதும் போராட வேண்டி வந்தது.
No comments:
Post a Comment
உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!