Tuesday, September 27, 2016

அவள் - கவிதைகள்

321
ஆக்ஸிஜன் நீ இல்லையெனில்
ஆக்ஸிடெண்ட் தான்
அடுத்த நிமிடமே.

322
அந்த மலர்களை 
எந்த பெர்முடேஷன் காம்பினேஷனில்
அடுக்கினாலும் இணை 
ஆகவில்லை உன் சிரிப்புக்கு.


323
உடனே மறுபடி புன்னகைக்காதே<
முதல் புன்னகையின்
அர்த்தம் புரியவே
அரை மணி இன்னும் தேவை

324
உதடுகள் சிரிக்கையில்
கண்களும் ஏன்?
இரண்டையும் ஒரே நேரம் ரசிக்க
இயலாமல் நான்!

325
ஏன் நீ முகம் பார்த்ததும்
சிலிர்க்க வேண்டும்,
அதனால் உடைய வேண்டும்
அந்தக் கண்ணாடி?

326
அதிலிருந்து தெறித்த
ஆயிரம் வார்த்தைகளை அள்ளி
உன் புன்னகையின்
அர்த்தத்தைத் தேடுகிறேன்

327
உன்னுடன்
நாளும் எழுந்து கொள்கிறது
அதிகாலையில்!

328
உன்னைக் கண்டதும்
உவமைகள்
ஓடி ஒளிந்து கொண்டன
நாணி.

329
உன் முகம் எனக்கு
இன்றைய வானிலை சொல்லும்
என் ஆகாயம்.

330
க்வாண்டம் ஜம்ப் அறியா
என் நினைவு எலெக்ட்ரான்கள்..
எப்போதும் அவை குதிப்பது
உன் பக்கமாகவே.

>>>0<<<

4 comments:

Thulasidharan V Thillaiakathu said...

அனைத்தையும் ரசித்தோம் சார்..322, 323, 329 அட இப்படிச் சொல்லிக் கொண்டே போனால் எல்லாமும் வந்துவிடுகிறதே...!!!!!

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை

Nagendra Bharathi said...

அருமை

Rekha raghavan said...

அனைத்தும் அருமை சார்.

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!