Wednesday, September 17, 2014

அவள் - 8.


44

பஸ்சிலும் ரயிலிலும்
படகிலும் விமானத்திலும்
பயணிக்கிறது உன்கூடவே
என் மனது.

45
ஆகச் சிறந்த நாள்
என்றெனக்கு ஒன்றுண்டு.
உன்னை முதலில்
கண்ட நாள்.

46
பொருளும் சுவையும்
பொருந்தி நிற்கிற
கவிதை நீ.

47
சுவரின் அந்தப்பக்கம்
நில்லேன்,
சொல்ல வந்ததை எல்லாம்
சொல்லி விடுகிறேன்

48
சந்திரனைக் கடன்
கேட்டேன்
ஆகாயத்திடம்,
உன் சிரிப்புக்கு
விலையாய்த் தர.

49
கம்பீரம்-
நீ உடுத்தியதால்
உன் புடவைக்கு
ஏற்படுவது.

50
பத்தாயிரம் வார்த்தைகளை
அடுக்குவது சிரமம்தான்.
இருந்தாலும் ஆரம்பித்து விட்டேன்
உன்
அழகை வர்ணிக்க.
><><>< 

(படம் – நன்றி: கூகிள்)

7 comments:

மனோ சாமிநாதன் said...

//பொருளும் சுவையும் பொருந்தி நிற்கிற கவிதை நீ.//

அழகை வர்ணிக்கும்போது பத்தயிரம் வார்த்தைகள் சுலபம் தான்!

நிலாமகள் said...

கடவுள் நலம் பாராட்டலும் காதலி நலம் பாராட்டலும் ஓயாத அலைகடல் அல்லவா!

வை.கோபாலகிருஷ்ணன் said...

அழகை வர்ணிக்க ...... பத்தாயிரம் என்ன, பத்து லக்ஷம் வார்த்தைகளும் பத்தாது தான் ...... எனக்கும் கூட :)

ஆக்கம் அழகு ! பாராட்டுக்கள், வாழ்த்துகள்.

[நிரந்தரம் இல்லாத] அழகே ... உன்னை ஆராதிக்கிறேன் !

வெங்கட் நாகராஜ் said...

அழகை வர்ணிக்க பத்தாயிரம் வார்த்தைகள் - போதுமா.... :)

அனைத்துமே அருமை!

கோமதி அரசு said...

அனைத்தும் அருமை.

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை
அருமை
நண்பரே

Unknown said...

அழகு ஆளுக்கு ஆள் வேறுபடும்!

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!