Monday, September 23, 2013

நல்லதா நாலு .வார்த்தை.. 17

 
 
வாழ்க்கையின் அந்தி

 வருகிறது அதன்  

விளக்கேந்தி!

-Joseph Joubert

(‘Life’s dusk brings its lamp with it.’)

<<>> 

எல்லா விஷயங்களுமே

சிரமமானவை

எளிதாகும் முன்பு வரை.

- Thomas Fuller
(‘All things are difficult before they are easy.’)

<<>> 

'எத்தனை அற்புத
வாழ்க்கை நான்
வாழ்வது!
இத்தனை தாமதமாய்
புரிந்துகொண்டதே நான்

வருந்துவது!

-Colette hat a wonderful life I've had!
I only wish I'd realized it sooner.')


வருந்துவது!'

- Colette

('What a wonderful life I've had!
I only wish I'd realized it sooner
(What a wonderful life I‘ve had!

I only wish I’d realized it sooner!)

<<>> 

'துயரின் 
உயர் இசை,
நம்பிக்கை!'
- Anonymous
('Hope is grief 's best music.')

 <<>>

'ஆண்டவனும் புத்தகங்களின்
அருகாமையும் கொண்டவன்
நண்பர்கள் அற்றவன்
ஆகமாட்டான்.'

-Elizabeth Browning
('No man can be called friendless who has
God and the companionship of good books.')

<<>> 



'ஒரு நாள் கேட்பாய்
உன் வாழ்வா என் வாழ்வா
எது முக்கியமென்று.
நான் சொல்வேன்
எனதென்று.
எனை விட்டுச் செல்வாய்
என் வாழ்வே நீயென்றுணராமல்!'
-Kahlil Gibran
('One day you will ask me which is more important?

My life or yours? I will say mine and you will walk

away not knowing that you are my life.')

<<>> 

'அனைத்து விடையும்
அறிந்தவரிடம்
கேட்கப்பட்டதில்லை
அனைத்துக் கேள்வியும்.' .
<>
-Confucius
('He who knows all the answers has not
been asked all the questions.')

<<>> 
(படம்- நன்றி:கூகிள்)

 

 

14 comments:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

அழகிய பொன்மொழிகள் ரசித்தேன்

வை.கோபாலகிருஷ்ணன் said...

எல்லாமே அழகாகச் சொல்லப்பட்டுள்ளன்.
இரண்டும் ஐந்தும் மிகவும் பிடித்துள்ளன.
பாராட்டுக்கள்.

கோமதி அரசு said...

எல்லா பொன்மொழிகளும் நன்றாக இருக்கிறது.
நல்லதாய் நாலுவார்த்தை தலைப்பே அருமை.
நல்லதாய் நாலுவார்த்தை சொல்லமாட்டார்களா என ஏங்கும் நெஞ்சங்கள் நிறைய இருக்கிறார்கள்.

தி.தமிழ் இளங்கோ said...

வாழ்வியல் சிந்தனைகளுக்கு நன்றி!

Yaathoramani.blogspot.com said...

படித்து ரசித்து மகிழ்ந்தேன்
பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி

Anonymous said...

நாலு வார்த்தை நன்றாக உள்ளது.
வாழ்க்கையின் அர்த்தத்தை விளக்கும்படி.

வெங்கட் நாகராஜ் said...

அனைத்தும் அருமை.....

தொடர்ந்து பகிர்ந்து கொள்ளுங்கள்......

கவியாழி said...

ஊக்கம்தரும் நாலுவார்த்தை அருமை

தேன்மதுரத்தமிழ் கிரேஸ் said...

அனைத்தும் அருமை! இது எனக்கு பிகவும் பிடித்தது -// எனை விட்டுச் செல்வாய்
என் வாழ்வே நீயென்றுணராமல்!' // இந்தப் புரிதல் இருந்தால் பிரச்சினையே இல்லை.

இராஜராஜேஸ்வரி said...


'ஆண்டவனும் புத்தகங்களின்
அருகாமையும் கொண்டவன்
நண்பர்கள் அற்றவன்
ஆகமாட்டான்.'

அனுபவித்து உணர்ந்து சொன்ன வரிகளாக இருக்கும்..!

கலியபெருமாள் புதுச்சேரி said...

புதிய பொன்மொழிகளுக்கு நன்றி..

Unknown said...

அனைத்தும் அருமை! மிக்க நன்றி! நாலு வார்த்தை!

மாதேவி said...

சிந்தனைக்கு நாலு வார்த்தைகள்.

vimalanperali said...

வாழ்வின் தத்துவங்களைசொல்லும் பொன்மொழிகள்.நன்றாக இருக்கிறது வாழ்த்துக்கள்,

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!