Friday, September 6, 2013

ஊகம் பதினெட்டு, ஊக்கம் ஒன்று...


 

 
அன்புடன் ஒரு நிமிடம் - 43
 
யில் எக்மோரை நெருங்கிக் கொண்டிருந்தது. வினோதுக்கு மனது இதமாக இருந்தது. அதே போல் ஆர்வமுள்ள நண்பனுடன் இரண்டு நாள் அந்த இலக்கிய கருத்தரங்குக்கு சென்றுவிட்டுத் திரும்பியதில்!. வெகு நாளைய அவா ஆயிற்றே?

இன்னும் ரெண்டு மணி நேரம் பயணத்தில் வீடு. யமுனாவுக்கு அலை பேசிப் பார்க்கலாமா?

அழைத்தான். பதிலில்லை. 

லேசாய்க் கலவரம் மூண்டது மனதில்.

"என்ன தியாகு இது, பதிலில்லையே? ஸ்விச் ஆஃப் இல்லே வருது? அங்கே ஏதோ பிரசினை...?”

அட, சார்ஜ் தீர்ந்திருக்கும். விடு.

விடவில்லை. லாண்ட் லைன் முயற்சித்தான். கடைசி மணி வரை

பதிலில்லை.

வயிற்றுக்குள் பல்ப் எரிந்தது. பக்கத்து வீட்டு தொலைபேசிக்கு அழைப்பு கொடுத்தான்.

ப. வீ. மைதிலி எடுத்தாள். யமுனா அக்காவா? அக்கா அவசரமா குழந்தையோட ஆட்டோவில் கிளம்பிப்போனா.  நான் வந்து என்னன்னு கேக்கிறதுக்குள்ளே ஆட்டோ கிளம்பிட்டது.

அவ்வளவுதான். டென்ஷன் ஆகிவிட்டான். நெனச்சேன்! ஆஸ்பிடல் தான் போயிருப்பாள்! விகாசுக்கு ஏதோ பிராப்ளம் ஆயிருக்கும். சே, இந்த நேரத்தில நான் அங்கே இருந்திருந்தா எத்தனை ஈஸியா...

அதெல்லாம் ஒண்ணும் ஆயிருக்காது.

நோ. அதான் அந்த பதற்றத்திலதான் செல் போனை மறந்திருக்கா.

நிச்சயமா அப்படி இருக்காது. குழந்தைக்கு ஏதும் உடம்புக்குன்னா உடனே உனக்கு போன் செய்து அலர்ட் பண்ணியிருப்பா. தட்ஸ் ஷ்யூர் அபவுட் ஹர். பக்கத்தில ஏதாச்சும் ஃபிரண்ட் வீட்டுக்கு போயிருக்கலாம். இல்லேன்னா ஸ்கூலில் விகாஸோட டீச்சர் வந்து பார்க்க சொல்லி அவனை அழைச்சிட்டுப் போயிருக்கலாம். அல்லது பக்கத்து கணபதி கோயிலில் ஏதாச்சும் விசேஷம்னு…. ”

 வரிசையாக பதினெட்டு ஊகம் சொன்னான்.

கொஞ்சம் ஆசுவாசமானாலும் கேட்டான். அப்படீன்னா எனக்கு ஏன் ஒரு போன் பண்ணலே?”

போன் பண்ணிச் சொல்லாததிலிருந்தே தெரியலியா ஏதோ trivial matter தான்னு?

ஐந்தே நிமிடத்தில் அவனை அமைதியாக்கிவிட்டான் தியாகு.. பாசிடிவ் ஆகிவிட்ட மனம் அடுத்த விஷயத்துக்கு பாஸ் ஆனது.

தொடர்ந்த ஒன்றரை மணி நேர ரயில் பயணத்தின்போது அந்த கருத்தரங்கில் கேட்ட விஷயங்களைப் பற்றி அலசி, அசைபோட்டு, விவாதித்து, ரசித்து என்று  நேரம் சென்றதே தெரியவில்லை. பஸ்ஸில் ஏறிய பின்பும் தொடர்ந்தது சம்பாஷணை.

வீட்டை நெருங்கும்போதுதான் மீண்டும் அதெல்லாம் நினைவு வந்தது. உள்ளே நுழைந்தால்?

அப்போதுதான் வந்திருக்கிறாள். ஆஸ்பிடல்தான் ஓடியிருக்கிறாள். ஆத்திரத்தில் செல்லை மட்டுமல்ல பர்ஸையும் மறந்திருக்கிறாள். குழந்தைக்கு உடம்பு சரியில்லை  டாக்டர் சொன்ன விவரம் எல்லாம் சொன்னாள். பழகிய நர்சிடம் கடன் வாங்கி...

எல்லாம் அவன் சந்தேகப்பட மாதிரியே...

உடனே செய்ய வேண்டிய விஷயங்களை மடமடவென்று கவனித்தார்கள். மருந்துச் சீட்டை அவளிடமிருந்து வாங்கி ஓடிப்போய் வாங்கி வந்து... இட்லியும் தேநீரும் வாங்கிவந்து... வெந்நீர் ரெடி செய்து...

 சே, வந்த நினைப்பை அப்படியே விட்டிட்டேனே? உனக்கும் அப்படித் தோணாமப் போச்சே? என்றான் நண்பனிடம்.

எனக்கும் அப்படியேதான் தோணிச்சு! என்றான் தியாகு அமைதியாக. ஆனா நாம ரயிலில் இருந்தோம். எதுவும் பண்றதுக்கு இல்லை. ஏதும் செய்ய முடியாம டென்ஷனை மட்டும் ஏற்றிக் கொண்டே போனால் என்ன ஆகும்? உடம்பை வதைக்கிறதைத் தவிர ஒண்ணும் நடக்காது. இங்கே வந்து சேரும்போது, அப்படி நடந்திருக்கும் பட்சத்தில்,  அதை எதிர் கொண்டு நிற்கத் தேவையான அந்த சக்தி குறைந்திருக்கும். செயல்படும் வேகத்தை அது பாதிக்கும். அது எதுக்கு? அதுக்கு பதிலா முடிந்த வரையில் இயல்பா அந்த நிமிடங்களைக் கழித்துவிட்டு இருக்கிற சக்தி குறையாம வந்து சேர்ந்தா அதுவே பிரயோஜனமா இருக்கும். அதான் அப்படி இப்படி ஊகங்களை அடுக்கி உன்னை அமைதிப் படுத்தினேன். அதுவும் சரிதானே?’

 நோ நோ, அதுதான் சரி!
 
('அமுதம்' மே  2013 இதழில் வெளியானது)

<<<>>> 

(படம் - நன்றி:கூகிள்)

12 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

அது தான் சரி! சரியான கதை தான். பாராட்டுக்கள்.

ராமலக்ஷ்மி said...

/ அதுதான் சரி!/

ஊகித்ததைச் சொல்லாமல் ஊக்கம் கொடுத்த நண்பனைப் பாராட்டதானே வேண்டும்? நன்று:)!

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை.. அதுதான் சரி..!

Anonymous said...

பதறாத காரியம் சிதறாது என
உணர்த்திய கதை.

கவியாழி said...

னை மட்டும் ஏற்றிக் கொண்டே போனால் என்ன ஆகும்? உடம்பை வதைக்கிறதைத் தவிர ஒண்ணும் நடக்காது.//
ம்...எனத்த சொல்லுறது

ராஜி said...

அதுதான் சரி
>>
சரியாதான் சொல்லி இருக்கீர்

இராஜராஜேஸ்வரி said...

முடிந்த வரையில் இயல்பா அந்த நிமிடங்களைக் கழித்துவிட்டு இருக்கிற சக்தி குறையாம வந்து சேர்ந்தா அதுவே பிரயோஜனமா இருக்கும். அதான் அப்படி இப்படி ஊகங்களை அடுக்கி உன்னை அமைதிப் படுத்தினேன்.

அமைதிப்படுத்திய
அமுதமான நட்புக்கு பாராட்டுக்கள்..

கோமதி அரசு said...

முடிந்த வரையில் இயல்பா அந்த நிமிடங்களைக் கழித்துவிட்டு இருக்கிற சக்தி குறையாம வந்து சேர்ந்தா அதுவே பிரயோஜனமா இருக்கும். அதான் அப்படி இப்படி ஊகங்களை அடுக்கி உன்னை அமைதிப் படுத்தினேன்.//

அருமை. தானும் பதறி கூட இருக்கிறவர்களையும் பதற வைத்து அவசரத்தில் கையும், காலும் ஓடாமல் இருக்க வைக்காமல் ,அடுத்து போனவுடன் செய்ய வேண்டியவைகளை செய்ய சக்தியை சேமித்து வைக்க உதவிய நண்பருக்கு பாராட்டுக்கள்.

கரந்தை ஜெயக்குமார் said...

சரியாகத்தான் சொல்லியிருக்கிறீர்

ஹ ர ணி said...

அருமை ஜனா.

ரிஷபன் said...

ஏதும் செய்ய முடியாம டென்ஷனை மட்டும் ஏற்றிக் கொண்டே போனால் என்ன ஆகும்? உடம்பை வதைக்கிறதைத் தவிர ஒண்ணும் நடக்காது.

நியாயம்தான் !

தி.தமிழ் இளங்கோ said...

கதையில் வேண்டுமானால் நண்பன் அப்படி இருந்திருக்கலாம். பதட்டத்தில் யாருக்கும் எதுவும் என்ன செய்வது என்று தோன்றாது. மறுமுனையில் இருந்து பதில் கிடைக்கும்வரை போராட்டம்தான். எனக்கும் இதே மாதிரியான அனுபவம் ஏற்பட்டு இருக்கிறது. கதையின் கருவிற்கு நன்றி!

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!