"உப்புக் கருவாடு.." (முதல்வன்) பாட்டில் அந்த மிக மென்மைக் குரலைக் கவனித்திருப்பீர்கள். துளிப்பிசிறில்லாமல் அஸால்டாக ராகத்தை இழுக்கும் அந்த லாவகம்... அப்புறம் 'காதலர் தினம்' படத்தில் "தாண்டியா ஆட்டம்.." ஆடிய குரல். சரணத்தில்தான் தொடங்குவார் ரெண்டு பாட்டிலும்.
கவிதா கிருஷ்ணமூர்த்தி! இன்று பிறந்த நாள்!
கல்லூரித் தோழி இவரைத் தன் தந்தை பிரபல இசையமைப்பாளர் ஹேமந்த் குமாரிடம் அறிமுகப்படுத்த, அவர் தன் இசைநிகழ்ச்சிகளில் பாடவைத்தார். இசையமைப்பாளர் லக்ஷ்மிகாந்த் (பியாரிலால்) இவரது க்ளாஸிகல் இசையறிவைக் கண்டு வாய்ப்புகளை அந்த வளமான குரலுக்கு வழங்க.. கவிதா கிருஷ்ணமூர்த்தியின் பாடல்களை நாம் கேட்க ஆரம்பித்தோம்.
அட்டகாசமாக ஸ்ரீதேவி ஆடுவாரே ‘Mr. India’வில், “ஹவா ஹவாயி…”? அந்த அசத்தல் லக்ஷ்மி - ப்யாரி பாடல் டாப் இடம் வாங்கித் தந்தது. படத்தில் இவரின் மற்றொரு சூபர் ஹிட்: "Karte Hain Hum Pyaar Mr.India Se..”
ஆர்.டி.பர்மனின் இசையில் இவர் அழகாகப் பாடியது '1942 A Love Story’ படத்தில். மனிஷாவுக்கு பாடிய “Pyaar Hua Chupke Se…”வை மறக்க முடியுமா?
1995, 96, 97 என்று வரிசையாக மூன்றும் 2003 இல் ஷ்ரேயா கோஷலுடன் சேர்ந்து ஒன்றுமாக நான்கு Filmfare அவார்ட்!
கணீரென்று ஒலிக்கும் செல்லக் குரலை மெல்ல ரசிக்க வேண்டுமானால், “Aaj Main Upar…” (‘Khamoshi’) கேட்டால் போதும். கிசு கிசு குரலின் இனிமையை ரசிக்க இருக்கவே இருக்கிறது ‘ரிதம்' படத்தின் “காற்றே என் வாசல் வந்தாய்…”
அப்புறம்... சொல்லணுமா என்ன... சும்மா விளாசியிருப்பார் அந்தப் பாடலை! ஆம்மா, "ஜும்மா சும்மா தே தே..." தான்! ("Jumma Chumma De De.." - 'Hum')
>><<
No comments:
Post a Comment
உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!