Tuesday, March 8, 2022

மகளிர் தினத்தில்...

 


பொக்கிஷமாகப் பாதுகாத்த தன் 300 வருட ஆன்டீக் பீங்கான் பிளேட்டுக்கள்! கழுவும்போது வேலையாள் உடைத்துவிடுவதைப் பொறுக்க முடியவில்லை அந்தப் பெண்ணால். தானே செய்யவும் சிரமம். அதற்கொரு மெஷின் இருந்தால் எத்தனை நன்றாயிருக்கும்! தேடினார். கிடைக்கவில்லை. நாமே ஒன்றைக் கண்டு பிடித்துவிட வேண்டியதுதான் என்று இறங்கினார். கணவர் கடன் வைத்துவிட்டு மரித்துவிட, கண்டுபிடித்தாக வேண்டிய கட்டாயமும் நேரிட...

யோசித்தார். தண்ணீரின் அழுத்தத்தையே தேய்க்கிற கையாக்கினால் என்ன? செய்ய ஆரம்பித்தார். படிக்காத இவர் சொன்ன ஐடியாக்களை படித்த ஆண் உதவியாளர்கள் ஏற்கவில்லை, தாங்கள் தோற்கும் வரை!
உருவானது ஒரு உபயோகமான டிஷ் வாஷர்! உடனே பேடன்ட் வாங்கினார். சிகாகோவில் ஓர் கண்காட்சியில் போட்டிக்கு வைக்கப்பட்டிருந்த மெஷின்களில் அதுவே அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. உள்ளேயே ஒன்பது ஹோட்டல்கள் அதை உபயோகித்தன. முதல் பரிசை அனாயாசமாகத் தட்டிச் சென்றது.
அம்மாக்கள் அனேகருக்கு 'அப்பாடா!'வைத் தந்த அதை ஆக்கிய Josephine Cochrane பிறந்தது...
இதே மகளிர் தினத்தில்.

3 comments:

ராமலக்ஷ்மி said...

மகளிர் தினத்தில் நல்லதொரு பகிர்வு.

வெங்கட் நாகராஜ் said...

சிறப்பான தகவல்கள்.... மகளிர் தினத்தில் பிறந்தவர் மகளிருக்குச் செய்த உதவி!

கே. பி. ஜனா... said...

ராமலக்ஷ்மி..
வெங்கட் நாகராஜ்..

தங்கள் கருத்துக்கு நன்றி.

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!