உலகளாவிய வறுமையை மட்டுப் படுத்துவதற்கான சோதனை பூர்வமான அணுகுமுறைக்காக 2019 இல் நோபல் பரிசு (பொருளாதாரம்) பெற்றவர்.
Abhijit Banerjee… Feb. 21. பிறந்த நாள்.
மும்பையில் பிறந்து கொல்கத்தாவில் பட்டம் பெற்று, ஹார்வர்டில் பயின்று, பயிற்றுவித்து, எம்.ஐ.டி யில் பேராசிரியராகப் பணிபுரியும் இவரது மனைவி Esther Duflo வும் ஓர் பொருளாதார நிபுணர்.
ஜோடியாக நோபல் பரிசு பெறும் ஆறாவது தம்பதி. இவர்களுடன் பரிசைப் பகிர்ந்தவர் Michael Kremer.
ஆங்காங்கே நடத்திய பரிசோதனைகளில் இவர்கள் கண்டுபிடித்துச் சொன்ன ஒரு விஷயம், வறுமைப் பிரதேசங்களில் படிப்பறிவு குறைவாக இருப்பதற்குக் காரணம் உணவின்மை, புத்தகங்களின் போதாமை என்பதை விட கற்றுக் கொடுக்கும் முறை மாணவர்களின் தேவைக்கு ஏற்றதாக இல்லை என்பது. ஆசிரியர்களின் தகுதியை புதுப்பித்துக் கொண்டேஇருப்பதும் முக்கியம் என்கிறார்கள்.
1 comment:
தகவல் நன்று. தொடரட்டும் சிறப்பான பகிர்வுகள்.
Post a Comment
உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!