மேடையிலும் சரி திரையிலும் சரி புகழோடு அரை சதம் வருடம் நீடிப்பதென்பது லேசா? ஆனால் Rex Harrison-க்கு அது லேசே லேசே! ரெக்ஸ் என்றால் லத்தீனில் கிங் என்று அர்த்தம். நடிப்பில் கிங் தான். மெல்லிய ரோல்களில் மில்லியன்களைக் கவர்ந்தவர். ஸர் பட்டம் கிடைத்தது 1989 -இல்.
உடனே நினைவுக்கு வருவது ‘My Fair Lady’ தான். நாடகத்தில் புரஃபசர் ஹிக்கின்ஸ் வேடத்தில் நடித்தபோது அதி சிறந்த Tony அவார்ட் வாங்கியவர் படத்தில் நடித்தபோது அதி சிறந்த திரை அவார்டான ஆஸ்கார் வாங்கினார். ஒரே வேடத்திற்கு இந்த ரெண்டு அவார்டையும் வாங்கியவர் வெகு சிலரே. இவர்தான் சரி என்று கேரி கிரான்ட் மறுத்துவிட்டார் வாய்ப்பை. இவர் எடுத்துக்கொண்ட சிரமங்கள்! முக்கால் வருட கால்ஷீட்டுக்கு ரெண்டு வருடம் அந்த காரக்டருடன் வாழ்ந்தார். வசன பாடல்களில் இடையிடையே மியூசிக் அதிரும், கொஞ்சம் பிசகினாலும் வார்த்தையை வாத்தியங்கள் அடித்துக் கொண்டு போய்விடும். டைக்கு அடியில் ஒரு மைக்ரோபோனை வைத்துக்கொண்டு... சவாலே சமாளிதான்!
மற்றொரு பிரபல பாத்திரம் 'கிளியோபட்ரா' படத்தில் சீஸர்! இந்திப் படம் ஒன்றிலும் முக்கிய வேடம் ஏற்று நடித்தது பலருக்கு மறந்திருக்கும். ‘Shalimar’. தர்மேந்திரா ஜீனத் நடிக்க, ஆர் டி பர்மன் இசையில் அது ஒரு ஜேம்ஸ் ஹாட்லி சேஸ் நாவல்.
1930 இல் மாபெரும் விளையாட்டு/ஆட்டம் என்ற படத்துடன் தன் விளையாட்டைத்/ஆட்டத்தைத் தொடங்கினார். நுணுக்கமான நடிப்பில் மன்னன். ஷாலிமாரில் ஒரு confrontation சீனில் விழிகளை மட்டும் இந்தப் பக்கமிருந்து அந்தப்பக்கம் ஓட்டுவாரே, அது!
மைக்கேலஞ்சேலோவின் வரலாற்றை 'The Agony and the Ecstasy’ என்று படமாக்கும்போது அவர் விரும்பியது டைட்டில்ரோல்; என்றாலும் Pope Julius II ஆக சார்ல்டன் ஹெஸ்டனுடன் 'சபாஷ் சரியான போட்டி!' (ஹெஸ்டனின் உயரத்தை சமாளிக்க ஷூவை ரெண்டு இஞ்ச் உயர்த்திக் கொண்டாராம்.)
பாடிய பாடல் ஆஸ்கார் பரிசு வாங்கிற்று, Dr Dolittle படத்தில். மிருகங்களுடன் பேசும் டாக்டர் வேடத்தில் வெளுத்து வாங்கினார். யூனிட்டோடு பழகியதில் கிளி 'கட்' சொல்ல பழகிவிட்டது!.
Quote?
'காமிராவை நம்பவும் ஓர் நட்பாக நினைக்கவும் நாட்களாகும், ஆனால் அதன் பிறகே நல்ல நடிகராக முடியும்.'
'காமிராவை நம்பவும் ஓர் நட்பாக நினைக்கவும் நாட்களாகும், ஆனால் அதன் பிறகே நல்ல நடிகராக முடியும்.'
2 comments:
அறிந்தேன்... நன்றி...
அறியாத தகவல்கள். உங்கள் வழி நிறைய தெரிந்து கொள்ள முடிகிறது. நன்றி.
Post a Comment
உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!