சர்ர்ர்ர்ர்... அடுத்த முறை பைக்கை ஸ்டார்ட் பண்ணும்போது ஒரு மைக்ரோ செகண்ட் அவரை நினைவு கொள்ளுங்க. Gottlieb Daimler. ஏன்னா அவருதான் 'பைக்'கையே உலகில் 'ஸ்டார்ட்' பண்ணினவர்!
Gottlieb Daimler… இன்று பிறந்த்நாள்!
எந்த வாகனத்திலும் ஏற்றக்கூடிய சிறிய வேகமான எஞ்சின் தயாரிப்பதே அவர் லட்சியம். ஆங்காங்கே நீராவியில் ஓடிக் கொண்டிருந்தன நாலு சக்கர வாகனங்கள்.வேறு வழிகளை முயன்றார். உடன் வேலை பார்த்த Wilhelm Maybach உதவியுடன் தயாரித்தார் ஒரு 4 stroke internal combustion எஞ்சினை. ஒருவகை பெட்ரோலில் இயங்கக்கூடிய அதை முதலில் சைக்கிள் மாதிரி ஒன்றில் பொருத்த. உலகின் முதல் மோட்டார் சைக்கிள்! அசப்பில் ஏதோ சித்திரவதை சாதனம் மாதிரி பயமுறுத்திய அதற்கு சவாரி கார் (Reitwagen) என்று பேர் இட்டனர். அதனால் அவர் பெற்ற பேர்: 'மோட்டார்சைக்கிளின் தந்தை'.
முதல் 3 கி.மீ. ஓட்டிக் காட்டியதில் 12 கி.மீ. வேகம் எடுத்தது. மோ.சைக்கிளோடு நிறுத்தவில்லை. ஓடும் ஒவ்வொன்றிலும் அதைப் பொருத்திப் பார்த்தனர். படகு, ட்ராலி, ஏன், பறக்கும் பலூனிலும்.
பாரிஸில் (1894) நடந்த உலகளாவிய கார் ரேஸில் கலந்துகொண்ட 102 கார்களில் கடைசிவரை வந்த 15 காருமே இவரது டெய்ல்மர் எஞ்சின் பொருத்தியது என்றால் கேட்கணுமா என்ன? தொடர்ந்து கார் இண்டஸ்ட்ரியிலும் இறங்கி, தன் கார் (Mercedes) தடம் பதித்தார்.
2 comments:
தகவல் அருமை...
சிறப்பான தகவல்கள்...
Post a Comment
உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!