The First Lady of the Indian Screen… தேவிகா ராணி! இன்று பிறந்தநாள்!
பேர் பெற்ற குடும்பம். அப்பாவோ The First Indian Surgeon General of Madras. அம்மா ரவீந்திரநாத் தாகூரின் மருமகள்.
1928. இங்கிலாந்துக்கு படிக்கச் சென்றார். அங்கே சைலண்ட் படம் எடுத்த ஹிமாஷு ராய்க்கு காஸ்ட்யூம் ஆலோசகரானவர், சைலண்டாக அவரைக் காதலித்து மணந்துகொண்டார். ஜெர்மனியில் இருவரும் படமெடுக்கும் கலையை பயின்றுவிட்டு இங்கு வந்து, படமெடுக்க ஒரு ஃபைனான்சியரை அணுகினால், ஏற்கெனவே முதல் திரைப்படமான 'ஆலம் ஆரா'வுக்குக் கொடுத்து கையைச் சுட்டுக் கொண்டவர், கையை விரித்துவிட்டார். ஆனால் அவர் மகன் ராஜ் நாராயண் கை கொடுத்தார். பாம்பே டாக்கீஸ் உருவானது, இந்தியத் திரையுலக வளர்ச்சி வித்திடப்பட்டது.
ராய் நாயகனாக நடிக்க ராணி நாயகி. படம் 'கர்மா'. இந்தியாவில் தயாரான முதல் ஆங்கிலப் படம். முதல் முத்தக் காட்சி.
நடித்த பிரபல படம் 'அச்சுத் கன்யா.' கேள்விப் பட்டிருப்பீங்க. ஜோடி நம்ம அசோக் குமார்! இசையமைத்தது ஒரு பெண். ஸரஸ்வதி தேவி.
10 வருடம் 15 படங்கள்! பிறகு 5 வருடம் பாம்பே டாக்கீஸை நடத்தியபோது
திலீப் குமாருக்கு முதல் படம் (Jwar Bhata), அசோக் குமாரின் சூபர்ஹிட் படம் (Kismat தமிழில் 'பிரேம பாசம்')...
முதல் தாதா சாஹிப் அவார்டை இந்த முதல் திரையரசிக்கு வழங்கியது 1970இல்.