Wednesday, October 26, 2016

அவள் - கவிதைகள்


331


நீ பேசிக் கொண்டே..
நான் கேட்டுக்கொண்டே..
காலம் பார்த்துக்கொண்டே..

332
என்னுள் எங்கோ
ஒளிந்திருந்த இனிமையை
ஒளிரவிட்டாய் 
எளிதாய் வெளிக்கொணர்ந்து.

333
எத்தனை நேரம்
பேசுவதென்கிறாய்
பாடலல்லவோ 
கேட்டுக் கொண்டிருந்தேன்
நான்?

334
எத்தனை ஆயிரம்தான்
காம்பினேஷன்கள்
கொடுப்பாய் உன்
கடைக்கண்ணுக்கும்
புன்னகைக்குமாய்?

335
ஆச்சரியம்தான்,
வாழத் தொடங்கிய நாளும்
உன்னை சந்தித்த நாளும்
ஒன்றாக இருந்தது.

336
என் கற்பனையின் 
எல்லை,
அவள் அழகின் 
ஆரம்பம்.

337
நீ 
அருகே வர வர
என் உலகம் 
காலியாகிறது.


338.
நிலவுகூட சற்று நேரத்தில்
நிறுத்தி விடுகிறது தன்
தண் பொழிவை 
உன் அன்பைப் போலல்லாது.

339
நிகராய் ரசிக்கிற ஒன்றைக்
கண்டுபிடிக்கிற வரையில்
சொல்லப் போவதில்லை
உன்னைக் கவிதையென.

340
உன் அன்பை
ஒப்பிட முடியாது மழைக்கு,
பொழிய வேண்டிய நேரம்
பொழியாமல் இருந்துவிடுவதால்.



><><

3 comments:

ரிஷபன் said...

மழை பொழியாமல் பொய்க்கலாம்..
உங்கள் கவிதை மழை பொய்ப்பதில்லை..

கோமதி அரசு said...

அன்பை மழையோடு ஒப்பிடமுடியாதுதான்.
உண்மை.
அழகான கவிதைகள்.
பிரியமானவர்களின் அன்பை எதனோடும் ஒப்பிட முடியாதுதான்.

Thulasidharan V Thillaiakathu said...

அருமை சார்!! அழகான உவமைகள்...

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!