Monday, September 21, 2015

நல்லதா நாலு வார்த்தை...54



'உன் மிகப் பெரும் வாய்ப்பு நீ 
இப்போதிருக்கும் இடத்திலேயே 
இருக்கலாம்.'
- Napoleon Hill
('Your big opportunity may be right where you are.')
<>

'தயாராவதற்குத் தவறுவதன் மூலம்
தவறுவதற்குத் தயாராகிறீர்கள்.'
-Benjamin Franklin
('By failing to prepare, you are preparing to fail.')
<>

'இலக்குகளுக்கும் சாதனைகளுக்கும்
இடையிலுள்ள பாலமே 
கட்டுப்பாடு.'
-Jim Rohn.
('Discipline is the bridge
between goals and accomplishment.')

<>

'இன்னும் அவர்களில் எவரும் 
நம்மைத் தொடர்பு கொள்ள 
முயற்சிக்கவில்லை என்பதே,
அறிவுள்ள உயிரினம் 
பிரபஞ்ச வெளியில் இருக்கிறது 
என்பதற்கு ஒரு நிச்சய அறிகுறி.’
- Normandy Alden
('One of the surest signs that
intelligent life exists in outer space is
that none of it has tried to contact us yet.’)
<>

’உங்கள் பெற்றோரிடமிருந்து 
அன்பையும் சிரிப்பையும்
ஒவ்வொரு அடியாக எடுத்து வைக்கவும்
கற்றுக் கொள்கிறீர்கள், ஆனால் 
புத்தகங்கள் திறக்கப்படும்போது
உங்களுக்கு சிறகுகள் இருப்பதை
கண்டுபிடிக்கிறீர்கள்.'
- Helen Hayes
('From your parents you learn love and laughter
and how to put one foot before the other.
But when books are opened you discover that you have wings.')
<>

'மகிழ்வாய்த் தொடங்கி
விவேகமாய் முடிகிறது
கவிதை.'
- Robert Frost
('A poem begins in delight and ends in wisdom.')
<>

'மாற்றத்தைத் தழுவும் 
திறனே நுண்ணறிவு.'
- Stephen Hawking
('Intelligence is the ability to adapt to change.')

><><><><

(படம்: நன்றி-கூகிள்)

Saturday, September 19, 2015

அவள்... (கவிதைகள்)

176
வாழ்க்கைக் கதை
இடைவேளயில்
சரியான திருப்பம்-
நம் சந்திப்பு!

177
ஒரு நிமிடமே
ஆயிற்று உனக்கு எனை ஆள.
ஒரு யுகம் ஆனாலும்
விருப்பமில்லை எனக்கு மீள.

178
சொல்லிவிடு,
உன் கண்ணுடன் பேசுவதா
உன்னுடனா என்று.
முடியவில்லை ஒரே நேரத்தில்!

179
ஒவ்வொரு பூவாகக்
கேட்டுப் பார்த்தேன்
உன்னுடன் போட்டிக்கு
வர மறுக்கிறது.


180
புதுமைக்கு
புதுமையைக்
கற்றுக் கொடுத்தவள்…

181
போகிறேன் என்கிறாய்
நீ.
இருக்கிறேன் என்கிறது
கண்.

182
பக்கத்தில் நீ இருக்கையில்
இன்னிசை கேட்பதில்லை.
இன்னொரு சொர்க்கம் எதற்கு?

><><><
(படம் - நன்றி: கூகிள்)

Friday, September 11, 2015

கண்ணுக்குக் கண்ணாக…(நிமிடக் கதை)

அன்புடன் ஒரு நிமிடம்... 
”இரு இரு, யமுனா, நீ ஏதோ ஐடியா பண்ணிட்டே… தொடர்ந்து எப்பவும் நீயே ஜெயிக்கிறே! மூணு தடவை ஆச்சு. ரியலி சம்திங் தேர்…”
”அதெப்படி? நான் ஒண்ணும் ட்ரிக் பண்ணலியே உங்க கண்ணால பார்த்துதானே சொல்றீங்க?”
அதென்னவோ உண்மைதான். அவனால் ஒன்றும் சொல்ல முடியவில்லை.
“ஒரு மைக்ரோ அவன் வாங்கலாம்னு நினைக்கிறேன். என்ன சொல்றீங்க?” என்றுதான் முதல் தடவை வந்தாள்.
லேப் டாப்பிலிருந்து தலையை எடுத்த வினோத், ”இப்ப எதுக்கு?” என்று  தொடங்குவதற்குள்…
“இத பாருங்க, ஆர்க்யூ பண்ணவேண்டாம். ஒரு நிமிஷம் கண்ணை மூடுங்க கருப்பா ஒரு ஷேப் கற்பனை பண்ணுங்க. சதுரம் தோணிச்சுன்னா வாங்கிக் கொடுங்க, வட்டம் தோணிச்சுன்னா வேணாம். உங்களுக்கு வட்டம் எனக்கு சதுரம் சரியா? கண்னை மூடுங்க,”
மூடித்தான் பார்க்கலாமே… மூடினான். சதுரம் தோன்றியது. வென்றாள் அவள்.
இப்படித்தான் ஆரம்பித்தது. ஒவ்வொரு தடவையும் சதுரமே வந்தது அவளே ஜெயித்தாள்.
என்னமோ தந்திரம் இருக்கு என்று நினைத்தான். ஆனால் என்னது என்று கண்டுபிடிக்க முடியவில்லை.
”நிச்சயமா ஏதோ ஐடியா பண்றே!”
“ஐடியாவா? இனிமேல்தான் பண்ணப் போறேன். சரி, இப்ப ஒரு நிமிஷம் கண்ணை மூடுங்க. என்ன தெரியுது? ஸ்குயரா சர்க்கிளா?
”ஆமா, விஷயம் என்ன, அதை சொல்லலியே?”
”அது அப்புறம்! முதல்ல சொல்லுங்க”
சொன்னான், ”வழக்கம் போல சதுரம் தான் தெரியுது!”
“அதான் வரும். சொல்லப்போற விஷயமும் அதான்.”
“என்ன சொல்ல வர்றே?”
“இப்படி எப்பவும் கம்ப்யூட்டர் திரையையே கண்டினிவஸா பார்த்திட்டிருந்தா கண்ணை மூடினாலும் அதான் வரும். உங்க கண்ணை எப்படி இந்தப் பழக்கம் கெடுக்குதுன்னு காட்டறதுக்குத்தான் இப்படி நாலு தடவை பெட் கட்டினேன்.”
விஷயம் புரிந்தது அவனுக்கு.
“அதனால இனிமேல் இடையிடையே தேவையான அளவு ரெஸ்ட் கொடுக்கிறதா இருந்தால் மட்டும்தான் வீட்டில் நீங்க லேப்டாப்பை தொடணும். இதுதான் இப்ப  நீங்க தோற்றதுக்கு!”
”கண்டு கொள்ள வேண்டிய உண்மையை கண்ணுக்கு நேராகக் காட்டி விட்டாய், அப்புறம் மறுப்பு ஏது?” என்றான் வினோத். 
('அமுதம்’ செப் 2014 இதழில் வெளியானது - நிமிடம் 87)

Thursday, September 3, 2015

நல்லதா நாலு வார்த்தை... 53

’ஒரு புன்னகை என்பது
உலகளாவிய நல்வரவு.’
- Max Eastman
('A smile is the universal welcome.')
<>

'எடுத்துக் கொள்வது எது என்பதல்ல 
விட்டு விடுவது எது என்பதே 
நம்மை செல்வராக்குகிறது.'
- Henry Ward Beecher
('It is not what we take up,
but what we give up,
that makes us rich.')
<>

’ஒரே ஒரு புன்னகை மட்டுமே
உன்னிடம் இருக்குமென்றால்
அதை நீ நேசிப்பவர்களுக்கு அளி.'
- Maya Angelou
('If you have only one smile in you,
give it to the people you love.')
<>

'நேற்றைய தினம் அளவுக்கு ஒரு 
தொலைவு இவ்வுலகில் இல்லை.'
- Robert Nathan
('There is no distance on this earth 
as far away as yesterday.')
<>

’பறவை பாடுவது அதனிடம் ஒரு 
பதில் இருக்கிறதென்பதால் அல்ல,
அதனிடம் ஒரு 
பாட்டு இருக்கிறதென்பதால்.’
- Maya Angelou
('A bird doesn't sing because it has an answer,
it sings because it has a song.')
<>

'நம் மாபெரும் ஏமாற்றங்களுக்குப் பின்னரே
நம் மிகப்பெரும் வெற்றிகள் 
வருகின்றன பெரும்பாலும்.'
- Henry Ward Beecher
('Our best successes often come after
our greatest disappointments.')
<>

’இஷ்டப்படும் மனிதர்களால் ஆனது
இவ்வுலகம்; 
சிலர் வேலை செய்வதற்கு 
இஷ்டப்படுகிறார்கள்,
ஏனையோர் அவர்களை 
வேலை செய்யவிடுவதற்கு
இஷ்டப்படுகிறார்கள்.’
- Robert Frost
('The world is full of willing people;
some willing to work, the rest willing to let them.')

><><><

(படம்- நன்றி:கூகிள்)