அந்த மனிதருக்கு ஆயிரம் கவலைகள்.
அதில் ஒன்றையேனும் பகிர்ந்து கொள்ள
அவர் தயாராயில்லை.
எனினும் கேட்டுப் பார்த்தேன்.
எனக்கென்னமோ அவரைப்
பேசவைத்து விடலாம் போலத் தோன்றியது.
என் பல வித முயற்சியினூடே
யோசனைகளோடு நான் தடம் புரண்டதில்
அவரின் மௌனமே அந்தக் கவலைகளைத்
தாங்கிக் கொள்வதற்கான சக்தியை
அளித்துக் கொண்டிருக்கிறது என்பதை
அறியலானேன் கொஞ்சம் கொஞ்சமாக…
>>>0<<<
7 comments:
மௌனம் பலம்
(இதற்கு முன் இட்ட கருத்துரையில் எழுத்துப் பிழை நேர்ந்துவிட்டது)
தன்னைத் தானே
நம்பாதது
சந்தேகம்...!
மௌனத்தின் பலம்..!
மெளனமே அதிக சக்தியளிக்கிறது என்பதை நானும் இதன் மூலம் மெளனமாகப் புரிந்துகொண்டேன். பகிர்வுக்கு நன்றிகள்.
மெளனமே சக்தி அளிக்கும் உண்மை.
அருமை....
Post a Comment
உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!