Monday, June 23, 2014

நல்லதா நாலு வார்த்தை... 33



'புத்திசாலிகளிடம் சந்தோஷம்
 நானறிந்தவரை அதிசயம்!'
 - Ernest Hemingway
 ('Happiness in intelligent people
 is the rarest thing I know .’)
<> 

இனிய எளிய விஷயங்களே
 இறுதியில் வாழ்வில்
 நிஜமானவை.’
- Laura Ingalls Wilder
 (‘It is the sweet, simple things of life
 which are the real ones after all.’)
<> 

‘இரவில் படுக்கைக்குச் செல்கையில்
அன்பு, நம்பிக்கை, மன்னித்தல்
இம்மூன்றைத் தலையணையாகக் கொள்.
இதயத்தில் ஓர் பாடலுடன்
எழுவாய் காலையில்.'
 - Victor Hugo
 ('When you go to bed at night, have for your pillow
 three things: love, hope and forgiveness. And you will
 awaken in the morning with a song in your heart.’)
<> 

‘வாழமுடியும் என்
வாழ்க்கையை மறுபடியும் எனில்
வாரம் ஒரு தடவையேனும்,
கொஞ்சம் கவிதை படிக்கவும்
கொஞ்சம் இசை கேட்கவும்
உறுதி கொள்வேன்.’
-Charles Darwin
 (‘If I had my life to live over again, I would have
made a rule to read some poetry and listen to
some music at least once every week.’)
<>

‘ஓர் இதயம் நொறுங்குவதைத்
தடுக்க முடியுமானால்
வீணல்ல நான் வாழ்வது.’
- Emily Dickinson
 ('If I can stop one heart from breaking,
 I shall not live in vain.’).
<>

புத்திசாலியாக இருக்க இருக்க
புதிதாய்த் தெரிந்துகொள்ள வேண்டியது
நிறைய இருக்கும்.’
- Don Herold
 (‘The brighter you are, the more you have to learn.)
<>

‘பின்னோக்கித்தான்
புரிந்துகொள்ள முடியும்
வாழ்க்கையை; ஆனால்
முன்னோக்கித்தான் அதை
வாழ்ந்தாக வேண்டும்.’
- Soren Kierkegaard
 (‘Life can only be understood backwards;
 but it must be lived forwards.’)

><><>< 

(படம்- நன்றி : கூகிள்)

Thursday, June 19, 2014

நினைப்பதற்கு நேரமில்லை...



அன்புடன் ஒரு நிமிடம் - 60 

நுழையும்போதே கோபம் நுரை தள்ளிற்று கிஷோர்  முகத்தில் 

"ஏன் மாமா, நீங்க பண்ணினது உங்களுக்கே நல்லாயிருக்கா?"

எதைச் சொல்றே? என்றது பார்வை.

"ஊருக்குப் போய் எங்கப்பா, அம்மாவைப் பார்த்துட்டு வந்தீங்க. நல்லது... அக்கறையா விசாரிக்கிறானே தம்பின்னு அவங்களும் ஊரில தனியா இருந்துகொண்டு படற கஷ்டங்களை கொஞ்சம் சொல்லியிருக்காங்க. அவர்களால் இங்கே வரமுடியலே. எங்களுக்கு அங்கே போய் இருக்க முடியலே. சிரமம் தவிர்க்க முடியாதது. சொல்ற கஷ்டங்களுக்கு கொஞ்சம் காது கொடுத்துட்டு நாலு வார்த்தை ஆறுதல் சொல்லிட்டு வர வேண்டியதுதானே? அதை விட்டிட்டு.."

"விட்டிட்டு?"

"அவங்களை மேலும் பயமுறுத்தி.. அங்கே ஒருத்தி வேலை பார்த்துட்டு இருந்தாள், அவளைப் பார்த்தா சந்தேகமா இருக்குன்னு சொல்லி... இந்தக் காலத்தில யாரையும் நம்ப முடியாது, வரவர திருட்டு, கொள்ளை அதிகமாய்ப் போச்சுன்னு அங்கலாய்ச்சு... உங்களுக்குத்தான் ஹெல்த் பிரசினை ஏதும் இல்லையே, உங்க வேலைகளை, கொஞ்சம் தானே இருக்கும், அதை  நீங்களே பார்த்துக்கலாமேன்னு உசுப்பிவிட்டு...ஆக இப்ப அவளை வேலையிலிருந்து நிறுத்திட்டாங்க. நாலு நாளா  அவங்க வேலையை அவங்களே செஞ்சிட்டு இருக்காங்க. போய்ப் பார்த்தா அவங்களுக்கு வரிசையா ஏதாவது வேலை இருந்திட்டே இருக்கு. ஏன்  மாமா, ஏற்கெனவே அவங்க மகன்களைப் பிரிஞ்சு தனியா வாழ்ந்துட்டு எப்பவும் எங்களைப் பத்தியே நினைச்சிட்டு சதா கவலைப்பட்டுட்டு இருக்கிறாங்க. அதுக்கு  மேலே இது வேறயா?"

"அப்படியா? ஸாரி.  பொறுத்துக்க.  எப்படியாவது நம்பகமான இன்னொரு வேலைக்காரியை ஒரு மாசத்துக்குள்ளே பார்த்துக் கொடுக்கறேன்," என்று அவனை சமாதனப் படுத்தி அனுப்பினார் ராகவ்.

சொன்ன மாதிரியே ஒரு மாதத்துக்குப் பின் அவனை சந்தித்தபோது கேட்டார், "என்ன கிஷோர், நம்பகமான ஒரு ஆளை பார்த்துட்டேன், அடுத்த வாரமே அனுப்பி வைக்கவா?"

"அது வந்து மாமா... வேணாம். அவங்க இப்ப நல்ல ஹாப்பியா இருக்கிற மாதிரி தெரியுது. நேத்துகூட  பார்த்தேன். எதைப் பத்தியும் கவலைப் பட நேரமில்லாம அவங்க வேலையை அவங்களே செய்துட்டு அப்பப்ப  டி.விபத்திரிகைகள்னு ரெஸ்ட் எடுத்திட்டு பிசியா இருக்கிறாங்க.  கொஞ்ச நாளா  நல்ல தூக்கமும் வருதுன்னு சொல்றாங்கரெண்டு பேருக்கும் நோய் ஏதும் இல்லைங்கிறதால அதெல்லாம் செய்யறதில கஷ்டமும் இல்லேன்னு சொல்றாங்க. ஏன், செடிகளுக்கு தண்ணீர் விடறது நல்ல பொழுதுபோக்காவும் வேலையாகவும் இருக்கும்னு சொன்னதால.  போன வாரம் ரெண்டு ஆளை விட்டு ஒரு தோட்டம் போட்டு கொடுத்திருக்கேன்ஒரு வகையில நல்லது தான் நடந்திருக்குநீங்க என்ன காரணத்துக்காக சொல்லியிருந்தாலும்!"

"அந்தக் காரணத்துக்காகத்தானேப்பா அப்படிச் சொன்னேன்?" என்று அவர் சொல்லவே இல்லை
  

 (’அமுதம்’ டிசம்பர் 2013 இதழில் வெளியானது)
><><><
(படம்- நன்றி: கூகிள்)