Sunday, May 18, 2014

நல்லதா நாலு வார்த்தை... 30


 


'விஷயங்களைத் தள்ளிப்போடுவதை
நிறுத்தப் போகிறேன்,
நாளையிலிருந்து.'
<>
- Sam Levenson
(' I'm going to stop putting things off, starting tomorrow. ')
 

'எதை மட்டுமே விடமுடியாது
எனத் தெரிந்திருப்பதே
எளிமை.'
<.
-Paul von Ringelheim
('Simplicity means knowing what can't be left out.')
 

'விரோதிகளை வெல்பவனை விடத் தன்
விருப்பங்களை வெல்பவனையே பெரு
வீரனென்பேன் யான்.'
<.
-Aristotle
('I count him braver who overcomes his
desires than him who overcomes his enemies.')
 

'வார்த்தைகள்
விடை பெற்றுக் கொண்டதும்
இசை ஆரம்பிக்கிறது'.
<>
-Heinrich Heine
('When words leave off, music begins.')

 
'வாழ்க்கையிலிருந்து அதிக பட்சம்
வாரிக்கொள்ள ஒரு வழி,
அதை ஓர் சாகசமாக நோக்குவதே!'
<>
- William Feather
('One way to get the most out of life
is to look upon it as an adventure.')

 
'வேலைக்கு முன்
வெற்றி வரும் ஒரே இடம்:
அகராதி.'

-Vince Lombardi
('The only place success comes
before work is in the dictionary.')

 
'தன்னைக்
குற்றம் காணாதே!
போற்றிக் கொள்ளாதே!'

- Plutarch
('Neither blame or praise yourself.')
><><><><
(படம்: நன்றி: கூகிள்)

7 comments:

வெங்கட் நாகராஜ் said...

அனைத்துமே நல்மொழிகள்....

கோமதி அரசு said...

பொன்மொழிகள் எல்லாம் அருமை.

”தளிர் சுரேஷ்” said...

அனைத்தும் அருமை! முதல் மொழி சிறப்பு! நன்றி!

மனோ சாமிநாதன் said...

நல்லன சொல்லும் நன்மொழிகள் அனைத்தும்!

இராஜராஜேஸ்வரி said...

அனைத்தும் சிந்தனைக்கு விருந்து படைக்கின்றன..பாராட்டுக்கள்..!

ரிஷபன் said...

எல்லாம் அருமை.!

ராமலக்ஷ்மி said...

அனைத்தும் நன்று. முதலாவது அருமையாக சொல்லப்பட்டிருக்கிறது:)!

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!