''இது உங்களுக்கே நல்லாயிருக்கா? தவறாம ஒரு நாள் விட்டு ஒரு நாள் இப்படி ரெடியா இருன்னு சொல்ல வேண்டியது. அப்புறம் லேட்டாயிடுச்சு, வா, அப்படியே பக்கத்துல பீச்சுக்குப் போயிட்டு வரலாம்னு சமாளிக்கிறது.... அப்புறம் இந்த போலி அழைப்பெல்லாம் தேவையா?'' படபடவென்று பொரிந்து தள்ளி விட்டாள்.
ஒரு நிமிடம் பரிதாபமாக விழித்தான் அவன்.
''சரி, உண்மையான காரணத்தை சொல்லிடறேன். 'சினிமாவுக்குப் புறப்பட்டு இரு'ன்னா நீ நல்லா டிரஸ் பண்ணிட்டு அலங்கரிச்சிட்டு இருப்பே. பார்த்துக்கிட்டே இருக்கலாம் போல இருக்கும். ஆபீசிலும் வெளியிலும் பொண்ணுங்க நல்லா அலங்கரிச்சிட்டு அழகாக காட்சியளிக்கிறதைப் பார்த்துவிட்டு வீட்டுக்கு வரும்போது உன்னையும் அப்படி அழகு படுத்திப் பார்க்கத் தோன்றித்தான் இப்படி...''
''ஒரு நிமிஷம் இருங்க, இதோ புறப்பட்டு வர்றேன், பீச்சுக்கே போகலாம்!'' என்றாள் அவள்.
(குமுதம் 9 -4 -2008 இதழில் வெளியானது.)