Friday, January 21, 2022

மென்பொருளும் மெய்ப் பொருளும்...


‘மைக்ரோஸாஃப்ட்டை பில்கேட்ஸ் தொடங்கும்போது...’

‘அதான் எனக்கு தெரியுமே?’

சரி, அவரோட சேர்ந்து அதைத் தொடங்கியவர் ஆருன்னு தெரியுமா?

பால் ஆலன்.. அவரோட பள்ளி நண்பர். ( ஒன்றாகப் படித்த ஸ்கூலுக்கு நன்றாக ஒரு தொகையை பிற்பாடு அவர்கள் வழங்கினார்களாக்கும்.) 

Paul Allen… இன்று பிறந்த நாள்!

ரெண்டு பேரும் பள்ளி நண்பர்கள். காமன் இன்டர்ஸ்டாக இருந்தது கம்ப்யூட்டர்.  வாஷிங்டன் யூனிவர்ஸிடியில் ஆலன் சேர்ந்தபோது SAT இல் வாங்கியது முழு ஸ்கோர், 1600.

Basic ஐ வாசிக்க மைக்ரோ கம்ப்யூட்டர்களுக்கு இவங்க ஒரு வகை செய்ய, பிரபல MITS அதை வாங்கிக் கொள்ள ... தொடர்ந்து ஸாஃப்டாக லேண்ட் ஆனது ‘மைக்ரோஸாஃப்ட்’. அந்தப் பெயரைச் சொன்னதும் அவர்தான். 

P.C. க்கு ஈஸியானதாக இவங்க உருவாக்கிய ஓ. எஸ்.க்கு IBM ஓ,எஸ் சொல்ல, அது கம்பெனியை மேலே தூக்கியது. (MS-DOS).  அப்புறம் Windows ஐத் திறந்துவைக்க வியாபாரம் களைகட்டியது நாம் வியந்ததே.

முதல் எட்டு வருடங்கள் சீஃப் டெக்னாலஜிஸ்டாக இருந்தவர், நோய் காரணமாக (Hodgkin's Desease) அதை விட்டாலும் போர்ட் டைரக்டர்களில் ஒருவராக தொடர்ந்தார். 

நேற்றைக்கு பேசப்பட்டBrain Science, இன்றைக்கு பேசப்படும் A I, நாளைக்கு பேசப்பட போகிற Cell Science மூன்றுக்கும் இவர் இன்ஸ்டிட்யூட்களை தொடங்கியிருக்கிறார் ஏராளம் அள்ளித் தந்து. என்றைக்கும் பேசப்படும் இசைக்காகவும் ஓர் இன்ஸ்டிட்யூட் 2000 -ல் ஆரம்பித்தார். (The Experience Music Project) எப்படிப் பாராட்டாமல் இருப்பது இவரது தொலை நோக்கை?

நண்பர்களாக இருந்தால் மன வேற்றுமை வராமல் இருக்குமா? வந்தது. மனம் வென்றது. என்ன சொல்கிறார் பில்கேட்ஸ் இவரை பற்றி? ‘வாழ்க்கையையும் தன்னை சுற்றி உள்ளவர்களையும் மிகவும் நேசித்தார் ஆலன். தொழில் நுட்பத்துக்கும், பொதுச் சேவைக்கும் அவர் அளித்தவை பல காலம் இருக்கும்… அவரின்றி பர்சனல் கம்ப்யூட்டிங் வந்திருக்காது’ 

திருமணம் செய்துகொள்ளவில்லை. இரண்டு முறை கேன்சர் இவரிடம் தோற்றுப்போனது. 1982 -இலும் 2009-இலும்.

சினிமாத் துறையிலும் தடம் பதித்தார். சகோதரியுடன் சேர்ந்து ஆரம்பித்த Vulcan Productions எடுத்த டாக்குமெண்டரிகள் வாங்கிய அவார்டுகள் அனேகம் . முக்கியமான ஒன்று: ‘We The Economy’

மறையும்போது உலகின் அதிபெரும் 50 செல்வந்தர்களிலொருவராக இருந்தார். ரெண்டாயிரத்தி ஏழிலும் எட்டிலும் உலகின் 100 most influential மனிதர்களில் ஒருவரென Time வர்ணித்தது.

உலகளாவிய தொண்டுகளில் ஆர்வம் கொண்டு செய்ததில் ஒன்று ஆப்பிரிக்காவில் ஆனையினம் அழித்து விடாமலிருக்க மேற்கொண்ட கணக்கெடுப்பு.

Quotes? ‘நீங்கள் கற்றுக் கொள்வதாக இருந்தால் ஒவ்வொரு தோல்வியிலும் அடுத்த வெற்றியின் விதையொன்று இருக்கிறது, என் அனுபவத்தில்.’

'வாழ்க்கையில் உங்களுக்கு சந்தோஷம் தரும் விஷயங்களை  நீங்கள்  பார்க்கிறீர்கள்.  ஆனால் உலகை இன்னும் சிறந்த இடமாக மாற்றுவதற்கு  நீங்கள் என்ன செய்ய முடியும் என்பது  அதைவிட முக்கியமானது.'


1 comment:

வெங்கட் நாகராஜ் said...

சிறந்த ஒரு மனிதர் குறித்த சிறப்பான தகவல்கள். பகிர்வுக்கு நன்றி.

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!